புதுச்சேரியில் 'இயற்கை வாழ்வியலும் தமிழ் மருத்துவமும்' ஆய்வரங்க நிகழ்ச்சி இன்று (அக்.18) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை, துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், “ஆங்கில மருத்துவராக இருந்தாலும் எனக்கு இயற்கை மருத்துவத்தின் மீது நம்பிக்கை உண்டு. அதைப்போல ஒருங்கிணைந்த மருத்துவ முறையிலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இதனை மாற்று மருத்துவ முறை என்று சொல்வதைக் காட்டிலும், பக்க மருத்துவம் (Supportive Medicine) என்று அழைக்கலாம்” என்றார்.
தொடர்ந்து, ஆங்கில மருத்துவம், ஹோமியோபதி, சித்தா, இயற்கை மருத்துவம், யோகா ஆகியவை இணைத்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ‘ஆயுஷ்’ என்ற ஒரு துறையை ஆரம்பித்தார்.
மருத்துவ பத்திரிக்கையான ‘லேண்ட்செட்’ இந்தியாவில் கொரோனா மூலம் ஏற்பட இருந்த 45 லட்சம் உயிர்களின் இறப்பானது தடுப்பூசியாலும் தடுப்பு முறைகளாலும் தடுக்கப்பட்டது என்று அறிவித்துள்ளது” என்றார்.
மேலும், “முன்பு வெளிநாடுகளிலிருந்து ஆங்கில மருத்துவம் நம் நாட்டிற்கு இறக்குமதியாகும். ஆனால் இப்பொழுது இயற்கை மருத்துவம் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்கிறது. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இங்கிருந்து அதிகமான இயற்கை மருந்துகளை அங்கே எடுத்துச் செல்கிறார்கள்.
தமிழ் மருத்துவத்தில் வெளிவராத புதைந்து கிடக்கின்ற மருத்துவம் குறித்து அதிகம் ஆராய்ச்சிகள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். நம்முள் இருக்கும் பல நன்மைகளை நாம் அறியாமல் இருக்கிறோம்.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது மட்டும்தான் நல்லது என்ற கண்ணோட்டம் நிலவுகிறது. ஆனால் நம் மருத்துவம் விலை குறைவாக இருந்தாலும் மிக அதிக பயன்களை உடலுக்கு தருகிறது” என்றார்.
நிகழ்ச்சியில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகத்தின் இயக்குநர் டாக்டர் ஸ்ரீதரன், சித்தா யுனானி ஓமியோபதி ஆயுர்வேதா மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிறுவனர் சுசான்லி டாக்டர். ரவி, சித்த மருத்துவ அதிகாரி டாக்டர். ராஜலட்சுமி, அரியானா, சம்விர் பயோரடக் நிறுவனத்தின் மேலாண் இயக்கநர் சுமன்த் விர் கபூர் அவர்களே, சித்வா ஹெர்பரல்ஸ் & புட்ஸ் நிறுவனர் டாக்டர். விஜயராகவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“