/tamil-ie/media/media_files/uploads/2017/12/tamilisai-1.jpg)
விமான நிலையத்தில் பாஜக-வுக்கு எதிராக கோஷம் எழுப்பிய தமிழிசை மகனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்.
அப்போது உடன் இருந்த அவரது மகன் சுகநாதன் பாஜக-வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். உடனே அங்கிருந்த தமிழிசையின் பாதுகாவலர்கள், சுகந்தனை தடுத்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை, குடும்பப் பிரச்னை காரணமாக தனது மகன் பாஜக-வுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக விளக்கமளித்தார்.
பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய தமிழிசை சௌந்தரராஜன் மகன். தடுத்து நிறுத்திய தமிழிசையின் பாதுகாவலர்கள்.#பாசிசபாஜகஒழிகpic.twitter.com/zyvm8LPWuD
— Contractor Rajasekar® (@KAG_SekarTwitz) 9 June 2019
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக தலைமை குறித்து ராஜன் செல்லப்பா பேசியது உட்கட்சி விவகாரம். இதைப் பற்றி நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது, என்றார்.
தமிழிசையின் மகன் பாஜக-வுக்கு எதிராக கோஷம் எழுப்பியது, பாஜக-வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழிசை பேட்டி அளித்து கொண்டிருக்கும்போதே அவரது மகன் பாஜகவுக்கு எதிராக கோஷம்-செய்தி
வீட்டில் தாமரை மலர வைக்க முடியவில்லை இந்த லட்சணத்தில் இந்தி படிக்காததால் முன்னேறவில்லைன்னு கதை வேற
தூத்துக்குடியில் சோபியா மீது நடவடிக்கை எடுத்து போல உங்க மகன் மீது நடவடிக்கை உண்டா தமிழிசை மேடம்
— சுபாஷினி (@SubashiniBA) 9 June 2019
இதற்கிடையே அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து, சோபியா போல், தற்போது உங்கள் மகன் மீது நடவடிக்கை எடுப்பீர்களா எனக் கேள்வி எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.