மழை வெள்ள பாதிப்புகளை கையாள்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதன்காரணமாக 4 மாவட்டங்களும் கிட்டத்தட்ட வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. இதனையடுத்து, தமிழக அரசு பல்வேறு மீட்பு பணிகளை செய்து வருகிறது.
இந்தநிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடியில் மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், இந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். நான் இப்போது நேரடியாக குற்றம்சாட்டுகிறேன் தென்மாவட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது.
நான் நேரடியாக முதல்வரை பார்த்து கேட்கிறேன். 18 ஆம் தேதி இங்கே மக்கள் பரிதவித்து கொண்டிருக்கும் பொழுது வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் சந்திக்க வேண்டுமா? அல்லது "மக்களுடன் முதல்வர்" என்று கோயம்புத்தூரில் நிகழ்ச்சி நடத்த வேண்டுமா?
வெள்ளம் சூழ்ந்த பிறகு அதற்கு அடுத்த நாளும் வரவில்லை. கூட்டணிக் கூட்டத்திற்காக டெல்லி சென்றுவிட்டார். பிரதமரை பார்ப்பதற்காக தான் டெல்லி போனேன் என்கிறார்கள். கூட்டணி கட்சி நிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்து கொள்ளாமல் போனீர்களா? பங்கேற்றீர்கள்தானே.
தென் மாவட்டங்களில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுத்திருக்க வேண்டும். தென் மாவட்டங்களில் ஆறு, குளங்கள் எதுவும் தூர்வாரப்படவில்லை, அதையெல்லாம் சரியாக கவனித்து இருந்தால் கண்டிப்பாக இந்த பிரச்சனை வந்திருக்காது. இந்த சூழ்நிலையை மாநில அரசு மிக மோசமாக கையாண்டுள்ளது.
Visited flood affected Pottalkaadu Village in Tuticorin District Spent time at flood relief camp.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) December 25, 2023
Distributed Flood Relief materials to the beneficiaries. Got to know the facilities arranged for them, Served food & joined them for Tiffin.@PMOIndia @narendramodi @HMOIndia… pic.twitter.com/8ASiCa7bU5
மத்திய அரசு பற்றி குறைதான் சொல்லி கொண்டு இருக்கிறீர்கள். மத்திய அரசை குறை சொல்லி மாநில அரசு என்ன செய்தீர்கள்? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலமைச்சர் எவ்வளவு நேரம் செலவிட்டார்? ஒரு இடத்தில் இருந்து நிவாரணம் கொடுப்பது முதலமைச்சரின் வேலை இல்லை. நிவாரணம் மட்டும் போதாது வாழ்வாதாரத்திற்கு என்று அவர்கள் செய்துள்ளோம் என்பது தான் முக்கியம். திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது
முதலமைச்சர் இன்னொன்று சொல்லி இருக்கிறார். சென்னை மக்களை எப்படி மீட்டு எடுத்தோமோ அதேபோல தென்பகுதி மக்களை மீட்டெடுப்போம் என்கிறார். சென்னையை நீங்கள் மீட்டெடுக்கவில்லை. சென்னை மக்கள் தாங்களாகவே மீண்டும் எழுந்தார்கள், இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பின்னர் கனமழை பாதித்த நெல்லை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய பின் பேட்டியளித்த தமிழிசை செளந்தரராஜன், தென் தமிழகம் வருவதென்றால், எப்போதும் மகிழ்ச்சி தரும் ஆனால், இப்போது கவலையாக உள்ளது. பார்வையிட்ட பல இடங்களும், மிக மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. பல கண்மாய், குளங்கள் சேதம், குளக்கரையை முறையாக பராமரித்திருக்க வேண்டும். மத்திய அரசு, அவசர கால நிவாரணமாக ரூ1,000 கோடி வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “மு.க. ஸ்டாலின் ஒரு மணி நேரம் வெள்ளச் சேதங்களை பார்வையிட்டதாக இம்மக்கள் கூறுகின்றனர். இங்கு குழந்தைகளுக்கு பால் பவுடர் கூட கிடைக்கவில்லை.
இந்த நிலையில் வெள்ள மதிப்பை பார்வையிட ஒரு மணி நேரம் மட்டுமே இருந்துள்ளனர்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.