சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் விலை ஏற்றம் குறித்து கேள்வி எழுப்பி, பாஜகவினரால் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனரை சந்தித்தார் தமிழிசை சவுந்தரராஜன்.
ஆட்டோ ஓட்டுநரை சந்தித்தார் தமிழிசை சவுந்தரராஜன்:
சென்னை சைதாப்பேட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தெருக்கூத்து நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துடன் தமிழிசை சந்திப்பு
அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், பெட்ரோல் விலையேற்றம் குறித்து ஆட்டோ ஓட்டுநர் கதிர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்வியை அவர் சொல்லி முடிப்பதற்கு முன்னதாகவே பாஜக-வினர் அவரை தாக்கினர்.
Read More : ஆட்டோ ஓட்டுநரை பாஜக-வினர் தாக்கியதன் வீடியோவை காணவும், முழு விவரத்தை தெரிந்துகொள்ளவும் இதை கிளிக் செய்யவும்:
இதையடுத்து, நேற்று முன் தினம் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் கதிரை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் இன்று சந்தித்தார் தமிழிசை சவுந்தரராஜன்.
இந்த நிகழ்வை பார்க்கும்போது, காக்கா முட்டை படத்தில் வரும் கிளைமேக்ஸ் நினைவுக்கு வருகிறது. பீட்ஸாவுக்காக ஆசைப்படும் இரண்டு சிறுவர்கள், கடைக்குள் பணத்துடன் நுழைவார்கள். ஆனால் அவர்கள் சேரி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் என்பதால் அடித்து துரத்தப்படுவார்கள். இதனை ஒரு இளைஞர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர, அந்த நிறுவனம் பெரும் விமர்சனத்திற்குள்ளாகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2018/09/tamilisai-soundarrajan-meet-auto-driver-kathir-6.jpg)
எனவே நிறுவனத்திற்கு ஏற்பட்ட கலங்கத்தை நீக்க, அந்த சிறுவர்களை கடை ஓனர் நேரில் அழைத்து அவர்கள் ஆசைப்பட்ட பீட்ஸா சாப்பிடக் கொடுப்பார். தற்போது ஆட்டோ ஓட்டுநர் இல்லத்தில் நடத்ததும் காக்கா முட்டை படத்தில் வரும் காட்சியும் ஒத்துப் போவதை போலவே உள்ளது. ஒரே வித்தியாசம் அது பீட்ஸா, இங்கு தமிழிசை அவர்கள் வாங்கி வந்த இனிப்பு.
இந்த சந்திப்பின்போது கதிர் குடும்பத்தினரை சந்தித்து இனிப்புகள் வழங்கி சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியாக குடும்பத்தினருடன் இணைந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.