தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுனர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் செல்லும் முன்பாக சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவிலில் தரிசனம் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் தாணுமாலயனை தரிசித்து செல்வேன்.
கொரோனா எச்சரிக்கை மக்களிடையே குறைந்து வருவதை பார்க்கிறேன். கொரோனா குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.
-
மாவட்ட ஆட்சியர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் வரவேற்பு
கைகளை நன்றாக சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். இதனை மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். கொரோனா காலத்தில் 45 லட்சம் பேரின் இறப்பு இந்தியாவில் தடுக்கப்பட்டுள்ளது
சரியான நேரத்தில் தடுப்பூசி கண்டுப்பிடித்து கொடுக்கப்பட்டதால் மக்கங்களை காப்பாற்ற முடித்துள்ளது. எனினும், எப்போதும் கொரோனா தடுப்பு எச்சரிக்கை செயல்களை தொடர்ந்து பின் பற்ற வேண்டும்.
இந்தியாவில் மாநிலங்களில் உள்ள முதல்வர்_ஆளுநர் ஒற்றுமையாக இருந்து செயல் பட்டால் கருத்து வேறுபாடு வராது” என்றார். முன்னதாக, ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜனை, குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிஹரன் பிரசாத் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/