Advertisment

தேனியில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது- உச்ச நீதிமன்றத்தில் தெளிவுப்படுத்திய தமிழக அரசு!

இந்த திட்டம் கூச்ச சுபாவமுள்ள புலிகளுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு "பெரிய" மீளமுடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்றும் அரசு கூறியது.

author-image
WebDesk
New Update
theni neutrino research centre

theni neutrino research centre

வனவிலங்குகள், பல்லுயிர் பெருக்கம் மற்றும் பொதுமக்களின் போராட்டங்களை புறக்கணித்து, மேற்குத் தொடர்ச்சி மலையில் பதற்றமான சுற்றுச்சூழல் மண்டலத்தில் இந்திய நியூட்ரினோ ஆய்வகத்தை (ஐஎன்ஓ) அமைக்க விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் தெளிவுபடுத்தியுள்ளது.

Advertisment

இந்த திட்டம் கூச்ச சுபாவமுள்ள புலிகளுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு "பெரிய" மீளமுடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்றும் அரசு கூறியது.

தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில், அமையவுள்ள நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ஜி.சுந்தர்ராஜன்’ உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு’ வியாழக்கிழமை (பிப்.18) விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநில சுற்றுச்சூழல் துறை, வழக்கறிஞர் ஜோசப் எஸ். அரிஸ்டாட்டில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம், ”மாவட்ட அதிகாரி தொடங்கி, முதல்வர் வரை அரசு’ திட்டத்திற்கு எதிரானது என்பதைக் காட்டுகிறது”.

உண்மையில், திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையுடன் 2021 ஜூன் மாதம் பிரதமரை முதல்வர் சந்தித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு, கடந்த ஆண்டு செப்டம்பரில் தொழில் மற்றும் வனத்துறை அமைச்சர்களை சந்தித்து, திட்டத்திற்கு எதிரான அரசின் நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.

"மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஒரு உலகளாவிய பல்லுயிர் மையமாகக் கருதப்படுகிறது, இது ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உள்ளடக்கியது.

நியூட்ரினோ திட்ட அமைவிடமானது’ மதிகெட்டான்-பெரியார் புலிகள் வழித்தடம்" என்பதை அரசு கவனித்தது.

இந்த வழித்தடமானது பெரியாறு புலிகள் காப்பகத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லைகள் மற்றும் மதிகெட்டான் சோலா தேசிய பூங்காவை இணைக்கிறது என்று மாநில அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

முன்மொழியப்பட்ட திட்டப் பகுதி, சுற்றுச்சூழல் ரீதியாக’ ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள கிழக்கு வாழ்விடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி’ புலிகளின் மரபணு பரவலுக்கு உதவுகிறது.

இந்த பகுதியில் மிகச்சிறிய அளவு தொந்தரவு கூட’ புலிகளின் நடமாட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்பகுதி, சம்பல் மற்றும் கொட்டக்குடி ஆறுகளின் குறிப்பிடத்தக்க நீர்ப்பிடிப்பு மண்டலமாக விளங்குகிறது.

ஆய்வகத்திலேயே சோதனைகள் ஒரு கிலோமீட்டர் நிலத்தடியில் நடத்தப்படும் என்றாலும், பாரிய குண்டுவெடிப்பு, போக்குவரத்து, அகழ்வாராய்ச்சி மற்றும் சுரங்கப்பாதை போன்ற நடவடிக்கைகள்,  மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆழமான மண்டலத்தின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பாதிக்கும் என்று பிரமாணப் பத்திரம் விளக்கியது.

தேனியில் நியூட்ரினோ திட்ட கட்டுமானத்திற்காக’ சுற்றுச்சூழல் அமைச்சகம்’ டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை நிலைநிறுத்தும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) முடிவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டில்’ மாநிலத்தின் நிலைப்பாட்டை இந்த பிரமாணப் பத்திரம் தெளிவுபடுத்துகிறது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள்’ விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.       

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment