கோவையில் ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற 83 வயது முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (83). இவர் இன்று காலை அவரது மகள் மற்றும் பேத்தியுடன் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது பாலசுப்பிரமணியம் முதல் தளத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்திற்கு படி ஏறி சென்றார்.
முதல் தளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பாலசுப்பிரமணியம் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து வந்து முதியவரை பரிசோதனை செய்தபோது அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.
இதனைப்பார்த்து உடன் வந்த பாலசுப்பிரமணியத்தின் மகள் மற்றும் பேத்தி கதறி அழுத நிலையில், முதியவரின் உடலை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனு அளிக்க வந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. இது குறித்து ரேஸ் கோர்ஸ் காவல்துறையினர் சார்மி நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“