விலைவாசி உயர்வு வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு குறைகளை முன்னிறுத்தி பாஜக அரசை ஆட்சியை விட்டு வெளியேற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அனைத்து பொருட்களின் விலை உயர்வு, அரிசி, எண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, ஜி எஸ் டி வரி, பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி, பண மதிப்பிழப்பு, ரயில்வே உள்ளிட்ட பொது நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பாதது, தமிழ் மொழி வளர்ச்சிக்கு தமிழர்கள் காட்டும் ஆர்வத்தை, ஆணவம் என்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசியது, அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மொழியாக இந்தியை ஏற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் பேசியிருப்பது, மணிப்பூர் கலவரம், பொது நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் என பல்வேறு விஷயங்களை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
மேலும் இந்த மறியல் போராட்டத்தில் ரேஷன் திட்டத்திற்காக 50,000 மெட்ரிக் டன் அரிசியை வெளிச்சந்தையில் தமிழ்நாடு அரசு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையை ஒன்றிய அரசு உருவாக்கி இருப்பதாகவும், தமிழ்நாட்டின் மீது ஒன்றிய மோடி அரசு வன்மத்துடன் தாக்குதல் தொடுப்பதாகவும், 12 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழி மேம்பாட்டிற்கு 11.86 கோடியை ஒதுக்கும் ஒன்றிய அரசு சில ஆயிரம் பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருத மொழிக்கு198.83 கோடியை ஒதுக்கி பாரபட்சம் காட்டுவதாகவும், கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
/indian-express-tamil/media/media_files/IY7XdBQZMphxjzcHpWjr.jpg)
கோவை மாவட்டத்தில் ஐந்து இடங்களில் கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சில தொழில்துறை அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
மோடி அரசு தமிழகத்தின் மீது வன்மம் காட்டுகிறது - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், அனைத்து பொருட்களையும் தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே செல்கின்றன அரிசி விலை ரூபாய் 60 எண்ணெய் விலை மூன்று மடங்கு உயர்வு 2017 சமையல் எரிவாயு சிலிண்டர் 410 இப்போது 1240 வங்கி மூலம் மானியம் ஏமாற்று வேலை எனவும் பெட்ரோலிய பொருட்கள் மீது உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அநியாயமாய் 260 சதவீத வரி பாயிரம் நோட்டுகளை செல்லாது என அறிவித்தும் பண வசூலை மட்டும் குறியாக கொண்டு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரையும் சிறு குறு நடுத்தர தொழில்களை சீரழித்துவிட்டன.
/indian-express-tamil/media/media_files/gvSAbryBeGbUOcwQsjgo.jpg)
அரசு ரயில்வே பொதுத்துறை நிறுவனங்களில் பல லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருந்தும் அவற்றை நிரப்ப ஒன்றிய மோடி அரசு மறுத்து வருகிறது ஒரு முனையில் வருமானம் குறைகிறது மறுமனையில் விலைவாசி ஏறுகிறது சாமானிய மக்கள் வாழ்க்கையே நடத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களும் பெரும் கழகங்கள் மூலம் ஆட்சி அரியணை ஏறுவது பாஜகவின் ஒருங்கிணைந்த திட்டமாக இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை விட்டு வெளியேற்றுவதே இந்திய கூட்டணி முதல் கடமையாகிறது என்பதனை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடத்துவதாக இவ்வாறு தெரிவித்தார்.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“