கோவை கருமத்தம்பட்டி வாகராம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர் அந்த பகுதியில் இரண்டு வருடமாக மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மே மாதம் 4 நாட்களாக தொடர்ச்சியாக இரு வாலிபர்கள் அவரின் மளிகை கடைக்கு வந் மளிகை பொருட்கள் வாங்குவது போல் நடித்து சதாசிவத்திடம் 100 மில்லி கிராம் தங்கத்தை காண்பித்துள்ளனர்.
அன்பிறகு நாங்கள் குழி தோண்டும் பணி செய்து வருகிறோம். அப்படி நாங்கள் குழி தோண்டும்போது புதையல் ஒரு கிலோ தங்கம் கிடைத்துள்ளது. அதனை நாங்கள் உங்களிடம் கொடுக்கிறோம் 10 லட்ச ரூபாய் கொடுங்கள் என கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய சதாசிவம் கடைக்கு வந்த வாலிபர் இருவரிடம் 10 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து அந்த மர்ம நபர்கள் இரண்டு பேரும் ஒருபெரிய உருண்டை வடிவிலான பொருளை சதாசிவத்திடம் கொடுத்துவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பி சென்றனர். அதன்பின்பு அவர்கள் கொடுத்த நகையை பிரித்துப் பார்த்தபோது அலுமினிய குண்டுகள் இருந்தது. இதை பார்த்த சதாசிவம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இது தொடர்பாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“