Tamilnadu Ration Card Update : கடந்த 4 மாதங்களில் தமிழகத்தில் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு (ரேஷன் கார்டு) பெறுவதற்கு சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு விண்ணப்பித்துள்ளதாக உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
Advertisment
தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற திமுக கூட்டணியில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். இதனத் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் திமுக அரசு, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. தற்போது இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், இந்த சலுகைகளைப் பெறுவதற்கு மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரேசன் அட்டையை வீட்டில் இருந்தே பெறுவது எப்படி?
இந்நிலையில், அரசின் ஊக்கத்தை பெற இதுவரை ரேஷன் கார்டு இல்லாதவர்கள், மற்றும் புதிதாக திருமணம் ஆனவர்கள் என பலரும் தொடர்ச்சியாக, கடந்த மே மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி வரையிலும் தமிழகம் முழுவதும் 10,54,327 பேர் புதிய ஸ்மார் கார்டு கோரி விண்ணப்பித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதில், 7,28,703 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 2,61,844 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் 63,601 ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நடைப்பெற்று வரும் நிலையில், 6,65,102 விண்ணப்பங்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருவதாகவும், 63,780 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாகவும், உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது இதில் சென்னை மாவட்டத்தில் தென் சென்னையில் 67,051 பேரும், வட சென்னையில், 55,962 பேரும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 65,003 பேரும், சேலம் மாவட்டத்தில் 59,495 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil