சென்னை - ஆலப்புழா ரயிலில் புகைப்பிடித்த இளைஞர்களை தட்டிக் கேட்ட பயணிகளை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பான மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் பயணிகள் ரயிலில், பயணிகள் சிலரின் மீது, போதையில் வந்தவர்கள் தாக்குதல் நடநத்தியுள்ளனர். இதில் பெண் பயணியை ஒருவர் தரக்குறைவாக பேசிய வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இந்த ரயிலில் தனது குடும்பத்துடன் கோவைக்கு வந்துள்ளார்.
இந்த ரயில் ஈரோடு அருகே வந்தபோது, ரயிலில் ஏறிய இளைஞர்கள் மதுபோதையில் பாடல் போட்டபடி புகைப்பிடித்தபடியே வந்துள்ளனர். இதை பார்த்த மணிகண்டன், குழந்தைகள் இருப்பதால் இங்கு புகை பிடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி என இருவரையும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
ரயில் ஈரோட்டில் இருந்து திருப்பூர் வந்தவுடன், அந்த இளைஞர்கள் இறங்கிவிட்ட நிலையில், மணிகண்டன் இது குறித்து ரயில்வே போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளனர். இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார், பெண்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கில் எஸ்.ஆர்.டியை சேர்ந்த 17 வயது சிறுவன், திருப்பூர் பளையக்காடு பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் அசோக் உட்பட இருவரை கைது செய்தனர்.
இதில் 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், இளைஞர் அசோக்கை, சிறையிலும் அடைத்த போலீசார், இன்று மேலும் 2 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“