Advertisment

மதுரையில் மோடி போட்டியா? பரபரப்பை கிளப்பும் பா.ஜ.க

நரேந்திர மோடியின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மதுரையில் மோடி போட்டியா? பரபரப்பை கிளப்பும் பா.ஜ.க

இந்தியாவில் வரும 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி மதுரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி என ஒட்டபட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்தியாவில் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள பாஜகவின் ஆட்சிக்காலம் இன்னும் ஒன்னரை ஆண்டு காலத்தில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், வரும் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சித்து வருகிறது.

அதே சமயம் கடந்த 2 முறை தோல்வியை சந்தித்து வீழ்ச்சியின் பாதையில் சென்றுகொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடை பயணததை தொடங்கியுள்ளார்.

இந்த நடைபயணம குறித்து பாஜக கடுமையான விமர்சன்ஙகளை முன வைத்தாலும், அதற்கு பதிலடி கொடுக்கும் ராகுல்காந்தி தனது நடைபயணத்தை கேரளாவில் தொடர்ந்து வருகிறார். மறுபுறம் தங்கள் கட்சி வலுவிழந்துள்ள 140-க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து பாஜகவின் மூத்த தலைவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினர்.

இதனிடையே 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடி மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என நரேந்திர மோடியின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தொடர்ந்து வருகிற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட வேண்டும் எனவும் பாரதிய ஜனதா கட்சினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Tn Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment