New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/13/iOQW8ZzNmTrwpmFqlE2y.jpg)
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியினர் சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, 2026ன் துணை முதல்வரே' என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை வாழ்த்தி சென்னை முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த தி.மு.க பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏவாக இருந்த உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், தற்போது துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அதே சமயம், கூட்டணியில், இருந்து 17 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அதகாரத்தில் பங்கு இல்லை என்ற கருத்து தற்போது பெரும்பான்மையாக எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில், தங்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்தால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று விஜய் அறிவித்திருந்தார். அவரின் இந்த பேச்சால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்ட நிலையில், 2026-ல் தமிழக துணை முதல்வரே என்று காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியினர் சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
ஏப்ரல் 14 (நாளை) செல்வப்பெருந்தகை பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் ஏ.வி.எம்.ஷெரிப் என்பவர் இந்த போஸ்டரை ஒட்டியுள்ளார். இந்த போஸ்டரில், ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு - 2026 இன் துணை முதல்வரே" என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2026 என்பது திமுக கொடியின் நிறத்திலும் துணை முதல்வரே என்பது காங்கிரஸ் கட்சி கொடியின் நிறத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலை, நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என வலியுறுத்தியது கூட்டணி கட்சிகளுக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது, காங்கிரஸ் கட்சி 2026 ல் துணை முதல்வர் செல்வபெருந்தகைதான் என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது,இதனை வைத்து காங்கிரஸ் மேலிடமும் தி.மு.க.விடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு வலியுறுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த போஸ்டருக்கு செல்வப்பெருந்தகை தரப்பில் இருந்து வரும் பதில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.