தமிழ்நாட்டில் புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள தளபதி விஜய், தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்த தீவிரம் காட்டி வரும் நிலையில், 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்து வெளியாகியுள்ள ஒரு போஸ்டர் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டை பொருத்தவரை சினிமா மற்றும் அரசியல் என இரண்டுக்குமே மதுரை ஒரு முக்கிய இடமாக உள்ளது. மதுரையில் ஒரு படம் ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால் அந்த படம் பெரிய வெற்றியை பெறும் என்று நம்பிக்கை சினிமா வட்டாரத்தில் உள்ளது. அதேபோல், அரசியல் கட்சி தொடங்குபவர்கள் மதுரையில் மாநாடு நடத்துவார்கள். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் கூட தனது கட்சியை மதுரையில் இருந்து தான் தொடங்கினார்.
மதுரையை பொறுத்தவரை சினிமாவிலும் அரசியலிலும் தர நிர்ணயம் செய்யும் இடத்தில் அமைந்துள்ளதாக இருப்பதால் மதுரையை மையப்படுத்தி பல நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் மதுரையில் போட்டியிட வேண்டுமென பல்வேறு கோரிக்கைகள் ரசிகர்கள் கட்சியினரிடையே கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
2026 சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக போட்டியிட உள்ளதாக த.வெ.க. தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டமன்ற தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் விஜய் போட்டியிட இருப்பதாக போஸ்டர்கள் ஓட்டப்படுள்ள நிலையில் ரசிகர்கள் பெருமிதத்துடன் இருக்கின்றனர்.
த.வெ.க தலைமை கழகம், போஸ்டர் ஒட்டிய நபர்கள் கட்சியில் நீக்கப்பட்டவர்கள் இப்படி ஓட்டினார்களா? அல்லது ரசிகர்கள் ஓட்டினார்களா..? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த போஸ்டர் தற்போது வைரலாக பரவி வருவதால், மதுரை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொகுதியில் தற்போது சட்ட மன்ற உறுப்பினராக திமுக வை சேர்ந்த கோ.தளபதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil