தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் சில மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் இன்றும் நாளையும், தென் தமிழகம் தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசன மழைப்பெய்யக் கூடும்.
இந்நிலையில் இன்னும் 3 மணி நேரத்தில் தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“