திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூர், துபாய் மற்றும் சார்ஜாவிலிருந்து வந்த 3 பயணிகள் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.23 84 லட்சம் மதிப்புள்ள 401 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை கோலாலம்பூர், ஷார்ஜா மற்றும் துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் கோலாலம்பூரில் இருந்து வந்த பயணி தனது ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் சிறிய தங்க நகைகளை எடுத்து வந்தது தெரியவந்தது. அதேபோல் துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வந்த இரண்டு பயணிகளை சோதனை செய்தபோது அவர்கள் ஜீன்ஸ் பேண்டில் தங்க பட்டன் பொருத்தி தங்கத்தை கடத்தி வந்ததும், தங்கத்தை பிளாஸ்டிக் பேப்பரில் ஸ்பிரே செய்து அதனை எடுத்து வந்ததும் தெரிய வந்தது.
இதனை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 23 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள 401 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் தினம் தோறும் தங்கக் கடத்தல் தொடர்கதையாகி இருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“