பல லட்சம் மதிப்புள்ள நடராஜர் சிலை மீட்பு; இருவரிடம் போலீசார் விசாரணை

3 – அடி உயரமுள்ள திருவாச்சியுடன் கூடிய நடராஜர் உலோகச்சிலையை காரில் மறைத்து வைத்திருந்திருந்தது தெரியவந்தது .

3 – அடி உயரமுள்ள திருவாச்சியுடன் கூடிய நடராஜர் உலோகச்சிலையை காரில் மறைத்து வைத்திருந்திருந்தது தெரியவந்தது .

author-image
WebDesk
New Update
பல லட்சம் மதிப்புள்ள நடராஜர் சிலை மீட்பு; இருவரிடம் போலீசார் விசாரணை

க. சண்முகவடிவேல்

தமிழகத்தின் பல பகுதிகளில் சிலைகளை திருடி அந்த சிலைகள் தொன்மையான சிலைகள் எனக் கூறி ஏமாற்றி சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, சென்னை சிலை திருட்டு தடுப்புப்பிரிவு காவல்துறை இயக்குநர் ஜெயந்தமுரளி மற்றும் காவல் துறை தலைவர் தினகரன் ஆகியோர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

Advertisment

இந்த உத்தரவின் பேரில் சிலை திருட்டு தடுப்புப்பிரிவு திருச்சி கூடுதல் சரக காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் ராஜேஸ், பிரேமாசாந்தகுமாரி, சார்பு ஆய்வாளர்கள் பாண்டியராஜன் , தலைமை காவலர் பரமசிவம் மற்றும் சிவபாலன் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படையினர், கோயம்புத்தூர் சென்று தகவலாளி மூலமாக பேசி சிலையை வாங்குபவர்கள் போன்று கோயம்புத்தூர் கொண்டு வருமாறு கூறியுள்ளனர்.

publive-image

அதன்படி நேற்று 06- ம் தேதி அதிகாலை 05.00 மணியளவில் கோவையிலிருந்து பல்லடம் செல்லும் மெயின்ரோட்டில் இருகூர் பிரிவில் காத்திருந்த போது KL 08 BV 8040 ஹூண்டாய் கிரீட்டா காரில் வந்தவர்களை போலீஸார் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரை ஓட்டிவந்தவர் ஜெயந்த் வயது -22 , மற்றொரு நபர் பெயர் சிவபிரசாத் நம்பூதிரி வயது -53 என்பது தெரியவந்தது.

Advertisment
Advertisements

அதனைத் தொடர்ந்து அந்த காரை சோதனை செய்தபோது காரின் டிக்கியில் வெள்ளை நிற சாக்கு பையில் சுருட்டிய நிலையில் சுமார் 3 – அடி உயரமுள்ள திருவாச்சியுடன் கூடிய நடராஜர் உலோகச்சிலையை மறைத்து வைத்திருந்திருந்தது தெரியவந்தது . இதுகுறித்து போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது நடராஜர் சிலையை காரில் கொண்டு வந்ததற்கு தக்க முகாந்திரம் கூறாமல் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

publive-image

இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் திருவாச்சியுடன் கூடிய நடராஜர் உலோகச்சிலை மற்றும் சிலையை கொண்டு வந்த காரையும் கைப்பற்றி காவல் ஆய்வாளர் பிரேமா சாந்தகுமாரி கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . கைப்பற்றப்பட்ட சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. மேலும் சிலையை மீட்ட காவலர்களின் பணியை பாராட்டி காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் சைலேந்திரபாபு வாழ்த்து தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: