நாடாளுமன்ற தேர்தலின் போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட 4 கோடி பணம் தொடர்பான வழக்கில் ரயிவே கேண்டீன் உரிமையாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர், பல இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டபோது, கடந்த ஏப்ரல் 6-ந் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கணக்கில் வராத ரூ4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த பணம் தற்போதைய எம்.எல்.ஏவும், நெல்லை தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும், பணத்தை கொண்டு சென்றதாக கைது செய்யப்பட்ட நவீன், சதீஸ், ஸ்ரீவைகுண்டம், பெருமாள் ஆகிய 4 பேரும் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் என்று பணத்தை அவரது தேர்தல் செலவுக்காக எடுத்து சென்றதாகவும் தகவல் வெளியானது.
இந்த குற்றச்சாட்டை நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுத்த நிலையில், இது தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பான கைது செய்யப்பட்ட நவீன், சதீஸ், ஸ்ரீவைகுண்டம், பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், அவரிடம் பணியாற்றும், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி உள்ளிட்டோருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு வரவேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.
மேலும் நயினார் நாகேந்திரன், அவரின் உதவியாளர் மணிகண்டன், பா.ஜ.க. அமைப்பு செயலாளர் சேகவ விநாயகம், கோவர்த்தன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து பா.ஜ.க நிர்வாகியும், சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் அவரது மகன், பாலாஜி உள்ளிட்ட பலர் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர்.
இதனிடையே இந்த வழக்கில் தற்போது, ரயில்வே கேண்டீன் உரிமையாளர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பா.ஜ.க பிரமுகர்கள், எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், அவரது மகன் மற்றும் அவர் தொடர்புடைய பலரிடம் இதுவரை விசாரணை நடத்தியுள்ள சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று, ரயில்வே கேண்டீஸ் உரிமையாளர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது இந்த வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“