ஷாக் நியூஸ்… தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் 49 லட்சம் பேர் ஆவணங்கள் லீக்..!

Tamil News Update : தமிழகத்தில் ரேஷன்கார்டு பயனாளர்கள் 49 லட்சம் பேரின் ஆவணங்கள் லீக் செ்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Peoples Documents League in Tamilnadu : கடந்த ஜூன் 28 அன்று நடந்த பயங்கரமான தகவல் லீக்கானது, அடுத்து நடக்க உள்ள மிகப் பெரிய தகவல்  லீக்கின் தொடக்கமாக இருக்கவே அதிக சாத்தியங்கள் உள்ளதாக சைபர் பாதுகாப்பு மற்றும் பெரிய தகவல் தொடக்கமான டெக்னிசான்ட் நிறுவனம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடிமக்களின் குடும்ப அட்டை (ரேஷன்கார்டு) டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டது. இதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் முக்கிய தகவல்களும், ஆதார் எண்களும்  பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூன் 28-ந் தேதி  49,19,668 ஆதார் எண்களை உள்ளடக்கிய 5.2 மில்லியன் பயனர்களின் தகவல்கள் சட்டவிரோமாக வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த தகவல்களை லீக் செய்யும்,  இணைப்பு, பிரபல ஹேக்கர் மன்றத்தில் ஜூன் 28 அன்று பதிவேற்றப்பட்டது,

இதில் கடந்த காலத்தில் கசிந்த தகவல்களை பகிர்ந்து கொண்ட ஒரு விற்பனையாளர் தனிநபர் அடையாளம் காணக்கூடிய தகவல் (பிஐஐ) குடிமக்களின் ஆதார் எண், பயனாளிகளின் விவரங்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் விவரங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை தகவல் பகிர்வு தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக டெக்னிசான்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தகவல் மீறல் கணினி அவசரநிலை பதிலளிப்பு குழுவுக்கு (சிஇஆர்டி) டெக்னிசான்ட் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவல் மீறலின் நிலை குறித்து “எங்கள் குழு மதிப்பீடு செய்து வருகிறது. இதில் குடிமக்கள் மோசடிக்கு ஆளாகாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம்  இதனால் மீறலுக்கு உட்பட்ட ஆதார் பதிவுகளின் எண்ணிக்கையை பகிரங்கமாக வெளியிட்டுள்ளோம் என்று டெக்னிசாங்க்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நந்தகிஷோர் ஹரிகுமார் கூறினார்.

மேலும் தமிழகத்தில் அதிகாரப்பூர்வ குடும்ப அட்டை பயன்பாடு இணையதளமான Tnpds.gov.in 1945VN என்ற பெயரில் செல்லும் ஒரு சைபர் கிரிமினல் குழுவால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் 68 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகள் மற்றும் 67 மில்லியன் ஆதார் பயன்பாடுகள் குறித்த தகவல்கள் இந்த குறிப்பிட்ட போர்ட்டலுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.  மேலும் இது மீறல் விற்பனையாளரால் வெளியிடப்பட்ட தகவலின் ஒரு பகுதி மட்டுமே என்றும் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu 49 lakh peoples documents league in tamilnadu reports

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com