Advertisment

கஞ்சா போதையின் உச்சம்... இளைஞரை கடத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 5 ரவுடிகள் கைது

சமயபுரம் அடுத்து இருங்களூர் அருகே இளைஞரை லிப்ட் கொடுப்பது போன்று வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீட்டிற்கு அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Trichy Robbery

திருச்சி

திருச்சி அருகே லிப்ட் கொடுப்பதுபோல் ஏமாற்றி அழைத்து சென்று வாலிபரை தாக்கி நைட்டி அணிவித்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட ரவுடி பாட்டில் மணி கூட்டாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisment

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அளித்த புகாரில்,  "நான் சமயபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் வாகன விபத்தில் சிக்கி சிகிச்சையில் உள்ள நண்பரின் சகோதரரைப் பார்த்துவிட்டு வீட்டிற்குச் செல்வதற்காக நின்றுகொண்டிருந்தேன்.

அப்போது  ஒரு இளைஞர் லிப்ட் கொடுப்பது போன்று சமயபுரம் அடுத்து இருங்களூர் அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னை, அடைத்து வைத்து, ஐந்து இளைஞர்கள் வாள் மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கி, மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட வைத்தனர். இதனை விடியோ எடுத்துள்ளனர்.

மேலும் தான் வைத்திருந்த செல்போன், ₹1,100 பறித்து கொண்டவர்கள், இந்த சம்பவம் குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி, சமயபுரம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இறக்கிவிட்டுச் சென்று விட்டனர்" எனத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் பலத்த காயம் அடைந்த இளைஞர், திருச்சி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இதனை அடுத்து, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பெயரில், லால்குடி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம் தலைமையில், சமயபுரம் காவல் ஆய்வாளர் விதுன்குமார் உள்ளிட்ட தனிப்படை போலீசார் அந்தப் பகுதியில் சென்று பார்த்தனர். அப்போது சமயபுரம் அருகே இருங்கலூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் இருந்த 5 பேரை காவல்துறையினர் பிடிக்க முயன்றனர்.

போலீசாரை பார்த்த 5 பேரும் தப்பி ஓடிய நிலையில், வசந்த், ரவி போஸ்கோ இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு, திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அய்யனார், யுவராஜ், கவியரசன் ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல்வேறு கொலை கொள்ளை குற்றவாளிகள் தொடர்புடைய ரவுடி ஜெகனை போலீசார் கைது செய்ய முயன்றபோது, போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதனால் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரவுடி ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். ரவுடி ஜெகனின் கூட்டாளியான பாட்டில் மணி என்பவர் மீது கொலை, அடிதடி, கொள்ளை என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இதனால் தன்னையும், திருச்சி மாவட்ட போலீசார் என்கவுண்டர் செய்து விடுவார்கள் என குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தார். இதனிடைய  கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்ட போலீசார் பாட்டில் மணியையும் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஆயுதங்களால் இளைஞரைத் தாக்கி, மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வைத்த வசந்த், ரவி போஸ்கோ, அய்யனார், யுவராஜ், கவியரசன் ஆகிய 5 பேரும் பாட்டில் மணியின் கூட்டாளிகள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த ஐந்து இளைஞர்களும் ஏற்கனவே திருச்சி - சென்னை சமயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் திருநங்கை ஒருவரை தாக்கி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tiruchirappalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment