வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் வலுபெற்று, மேற்கு – வட மேற்கு திசையில் தமிழ்நாட்டின் கடற்கரை பகுதியை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்ற நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்கில் கனமழை பெய்து பல்வேறு இடங்களில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டது. இதில் தென் தமிழகத்தில் பெய்த கனமழையின் காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட.
மேலும் தென் தமிழகத்தில் பல இடங்களில், கனமழை பெய்ததை தொடர்ந்து, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவிழந்தது. டிசம்பர் 16-ந் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது வங்கக்கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் வலுபெற்று, மேற்கு – வட மேற்கு திசையில் தமிழ்நாட்டின் கடற்கரை பகுதியை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர். காஞ்சிபுரம், கடலூர். விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 18-ந் தேதி கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர். அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்க வாய்ப்பு உள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“