இந்தியா இன்று 75 ஆவது சுதந்திர தின விழாவைக் கொண்டாடி வருகிறது. இதனை முன்னிட்டு இன்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக கோட்டையில் கொடியேற்றினார் ஸ்டாலின்.
சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஸ்டாலின், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு வருகை தரும் முதல்வர் 9 மணியளவில் தேசிய கொடியை ஏற்றினார். அப்போது மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். பின்னர் கல்பனா சாவ்லா விருது, அப்துல் கலாம் விருது, மற்றும் 5 பேருக்கு முதலமைச்சர் நல் ஆளுமை விருது வழங்கப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் சுதந்திர தின விழாவில் கலந்துக் கொள்ள அனுமதியில்லை. வீட்டிலிருந்தபடியே தொலைக்காட்சியில் கண்டுகளிக்க அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
சுதந்திர விழாவையொட்டி கோட்டைப் பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் 15000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil