சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் அம்ஸ்ராங் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் 8 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
சென்னைதிருவள்ளூர்காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முக்கிய தலித் தலைவராக வலம் வந்தவர் தான் ஆம்ஸ்ராங். தலித் அரசியல் மேடைகளில்அம்பேத்கரிய அரசியலை தீவிரமாகப் பேசி வந்த இவர், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்தார். சென்னை பெரம்பூரில் வசித்து வந்த ஆம்ஸ்ராங்கை நேற்று (ஜூலை 5) இரு சக்கர வாகனத்தில் வந்த பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆம்ஸ்ட்ராங் உடன் இருந்த வீரமணி மற்றும் பாலாஜி ஆகியோர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அவர்கள் இருவருமே பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே ஆம்ஸ்ராங் கொலை வழக்கில், 8 பேர் நீதிமன்றத்தில் சரணமடைந்துள்ளனர். இதில், கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் என்பவரின் சகோதரர் பாலு என்பவரும் சரணடைந்துள்ளதால், இந்த கொலை பழிக்கு பழியாக நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மேலும் அவருடன் சேர்ந்து ராமு, திருமலை, செல்வராஜ், அருள் என 8 பேர் சரணடைந்துள்ளனர். இதனால் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துள்ளதாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். கடந்த ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஆம்ஸ்ராங் என்றும், அதன் காரணமாக ஆற்காடு சுரேஷ் பிறந்த நாள் அல்லது நினைவு நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும் ஆற்காடு சுரேஷின் தம்பி ஆற்காடு பாலு தெரிவித்துள்ளனர்.
அதன்படி நேற்று ஆற்காடு சுரேஷின் பிறந்த நாள் என்பதால் திட்டமிட்டபடி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாகவும், ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் மற்றும் ஜெயபால் என்பவர் தன்னை மிரட்டியதால், பயத்தில் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். அண்ணனும் இல்லை மனைவியும் இல்லைஎன்ற விரக்தியில், இருந்ததால், இதற்கு காரணமாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டியதாக ஆற்காடு பாலு வாக்குமூலம் அளித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கொலை சம்பவம் நிகழ்வதற்கு முன்பாகவே ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை சார்பில், 3 முறை செம்பியம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் இது குறித்து அலச்சியமாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக எப்போதும் தனது ஆதரவாளர்களுடன் இருக்கும் ஆம்ஸ்ட்ராங் எப்போது தனியாக இருப்பார், என்பதை நோட்டமிட்டு இந்த படுகொலை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது ஆற்காடு பாலு கும்பல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.