கோவையில் பிளாஸ்டிக் மற்றும் பஞ்சு குடோன்களில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
கோவை குனியமுத்தூரை அடுத்த இடையார்பாளையத்தில் கண்ணப்பன் என்பவர் தனது தோட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட குடோன்களை சுரேஷ் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்த குடோன்களில் பிளாஸ்டிக் பொருட்கள் தலையணை செய்யக்கூடிய பஞ்சுகள் இருந்துள்ளது. இந்நிலையில் மின் கசிவு காரணமாக குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயானது மளமளவென அதிகமாகி அடுத்தடுத்த குடோனுக்கு பரவியாதால் தீயணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தகவல் அளிக்கப்பட்டதின் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
பிளாஸ்டிக் மற்றும் பஞ்சு ஆகியவையில் தீ பிடித்ததால் கரும்புகை வான் உயரத்துக்கு எழுந்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் லட்சக்கணக்கான ரூபாய் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளது.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“