தமிழகத்தில் பொதுமக்களின் அத்தியாவாசியமாக உள்ள போக்குவரத்து துறை மிகவும் சீர் கெட்ட நிலையில் இருப்பதாகவும், போக்குவரத்து துறையில் உள்ள அரசியல் சார்ந்த சங்கங்களும் இதற்கு ஒரு காரணம் என ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர்கள் ஆலோசணை கூட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள கேரள சமாஜ அரங்கில் நடைபெற்றது. மண்டல ஒருங்கிணைப்பாளர் வாமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் வசீகரன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடையே பேசினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் வசீகரன் கூறுகையில்,
Advertisment
Advertisements
தமிழகத்தில் பொதுமக்களின் அத்தியாவாசியமாக உள்ள போக்குவரத்து துறை மிகவும் சீர் கெட்ட நிலையில் உள்ளது. போக்குவரத்து துறையில் உள்ள அரசியல் சார்ந்த சங்கங்களும் இதற்கு ஒரு காரணம். தனியார் பேருந்துகள் நல்ல லாபகரமான முறையில் இயங்கி வரும் நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதற்கு நிர்வாக சீர் கேடு தான் காரணம்.
எனவே போக்குவரத்து கழகங்களை கலைத்து விட்டு அரசு நேரடி நியமனங்களை செய்ய முன்வரவேண்டும். ஆம் ஆத்மி கட்சி துவங்கி பத்து ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது. நடந்து முடிந்த குஜராத் தேர்தலில் இரு பெரும் தேசிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி ஆம் ஆத்மி மாபெரும் வெற்றி பெறும் என நம்பிக்கை உள்ளது.
கோவை சிட்ரா பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த அ.தி.மு.க.ஆட்சியில் துவங்கப்பட்டு தற்போது அதில் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அவினாசி சாலை சிட்ரா பகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்து நிலைய பணிகளை மீண்டும் துவங்க அரசு முன் வர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில்,மாநில மகளிர் அணி பொறுப்பாளர் ஸ்டெல்லா மேரி,மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் ஆண்டனி ,செயலாளர் டோனி சிங்,திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் சாகுல் அமீது,சாந்து,ஜாபர் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“