தமிழகத்தில் கடந்த வாரம் வீசிய ஃபீஞ்சல் புயல் காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெள்ள நிவாரண நிதியாக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ10 வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் ஃபீஞ்சல் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. ஃபீஞ்சல் புயல் கரையை கடந்த நிலையிலும் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. 50 செ.மீ அளவு மழை பதிவானது. இதனால் வீடுகளுக்குள் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் தங்களை உடமைகளை இழந்து பெரும் சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 நிவாரணம் வழங்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் பாதிப்பை கருத்தில்கொண்டு தேசிய பேரிடர் நிதியில் இருந்து நிவாரண நிதி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“