தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்ட அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் முக்கிய தொகுதியாக பாஜகவின் தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில், காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் ஆகியோரை பின்னுக்கு தள்ளி 1728 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் 2-வது இடம் பிடித்தார்.
இதனைத் தொடாந்து எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்ட வானதி சீனிவாசன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோலை தெற்கு தொகுதியில், தன் அலுவலக திறப்பு விழாவை நடத்தினார். இது குறித்து புகைப்படத்தை வானதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதில் எம்எல்ஏ அலுவலகத்தில் உள்ளே சுவற்றில் தன லாபம் என்று எழுதி பூஜைகள் செய்யப்ட்டிருந்தது. இதனை பார்த்த சமூக வலைதளவாசிகள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இன்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டது .
Inauguration of #Kovaisouth assembly #MLA office .@BJP4TamilNadu pic.twitter.com/dJcOntNK5Z— Vanathi Srinivasan (@VanathiBJP) June 14, 2021
மேலும் வானதி அக்காவுக்கு 60வது கல்யாணம் நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களா என மீம்மஸ் கிரியேட்டர்களோ, கலாய்த்தனர். இதனால் பெரும் பரபரப்பை ஏழுந்துள்ள நிலையில், தற்போது தன லாபம் என்று போட்டு நடிகர் எஸ்.வி. சேகர் ட்வீட் செய்திருப்பது மக்களிடம் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. இது தொடர்பாக தனலாபம் புகைப்படத்துடன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள எஸ்.வி. சேகர்
🎤உங்க தொழில்?
😊MLA
🎤ஓ அதையே தொழிலாக்கிட்டீங்களா
😊அதான் எம் எல் ஏ ஆபீஸ்லயே லாக்கர் வைச்சு பூசை போட்டிருக்கேன்.
🎤 கேக்கும் போதே புல்லரிக்குது. உங்களை பேட்டியெடுத்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.
😊ME TOO
🎤 ஐயையோ என்னை விட்டுடுங்க
😀அந்தப்பெண்ணுக்கு ஆங்கிலம் புரியாம ஓடுது 😀 pic.twitter.com/fAGMiECnFz— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) June 15, 2021
பேட்டி எடுப்பாவர் : உங்க தொழில்?
பேட்டி கொடுப்பவர் : எம்.எல்.ஏ.
பேட்டி எடுப்பாவர் : ஓ அதையே தொழிலாக்கிட்டீங்களா
பேட்டி கொடுப்பவர் : அதான் எம் எல் ஏ ஆபீஸ்லயே லாக்கர் வைச்சு பூசை போட்டிருக்கேன்.
பேட்டி எடுப்பாவர் : கேக்கும் போதே புல்லரிக்குது. உங்களை பேட்டியெடுத்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.
பேட்டி கொடுப்பவர் : மீ டூ
பேட்டி எடுப்பாவர் : ஐயையோ என்னை விட்டுடுங்க
பேட்டி கொடுப்பவர் : அந்தப் பெண்ணுக்கு ஆங்கிலம் புரியாம ஓடுது என்று தெரிவித்துள்ளார்.
எஸ்வி சேகரின் இந்த ட்விட்டை பார்த்த ஒருவர், இதில் உங்களுடைய நோக்கம் என்னவென்று கேட்க நகைச்சுவை என்று பதில் அளித்துள்ளார். மேலும் அவரின் தன லாபம் ட்வீட்டை பார்த்த சமூக வலைதளவாசிகள் இதுக்கு நீங்க வானதி அக்காவிடம் நேரடியாகவே கேட்டிருக்கலாம் சார் எனவும், செம கலாய், செம கலாய். உங்கள் கட்சிக்காரவுங்கள நீங்களே கலாய்த்தால் எப்படி சார் எனவும், வானதி அக்கா மீதான கடுப்பில் இப்படி ட்வீட் செய்துள்ளார் எஸ்.வி. சேகர். தொடர்ந்து இது போன்று காமெடி பண்ணவும் சார். கொரோனா கஷ்ட காலத்தில் சிரிக்க வைக்கிறீர்கள் என பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த பதிவு ட்விட்டர் பக்கத்தில் டிரெண்டாகி வருகிறது.
அது என்ன MLA ஆப்பீஸ்ல்ல "தன லாபம்" pic.twitter.com/mDAT4GTqCv
— Malairaja (@Malaira70329406) June 14, 2021
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.