பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர காவல் ஆணையரிடம் அதிமுக சார்பில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டிருக்கிறது . இந்த புகார் மனுவை அதிமுக மருத்துவ அணி மாநில செயலாளர் டாக்டர் சரவணன் அளித்துள்ளார்.
இந்த புகார் மனுவில், கடந்த 25 ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கத்தோடு தொடர்ச்சியாக அ.தி.மு.க.வையும் அதன் பொதுச்செயலாளரை தரக்குறைவாக பேசி வருகிறார்.
எடப்பாடி பழனிச்சாமி அவமானப்படுத்தும் நோக்கிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். அ.தி.மு.க குறித்தும், எடப்பாடி பழனிச்சாமி குறித்த அவதூறு பரப்பி வரும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக பாஜக சார்பில் சென்னையில் தமிழக மீட்போம் தளராது உழைப்பு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: சக்தி சரவணன் - மதுரை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“