Admk Edappadi palanisamy Say About PMK Ramadoss : தமிழகத்தி்ல் கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகள் கூட்டணி தர்மத்தை மீறியதால் பாமக தோல்வியை சந்தித்தது என்று கூறிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்துக்கு பதில் அளித்துள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் சமயத்தில் கூட்டணி தாவுவது பாமகவின் வாடிக்கை என்று விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தலில் அதிமுக பாஜகவுடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த பாமக 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிவு பாமகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தேர்தல் தோல்விக்கு அதிமுகதான் காரணம் என்று விமர்சிக்க தொடங்கினர்.
இதனால் அதிமுக பாமக இடையே மோதல் போக்கு அதிகரிக்க தொடங்கிய நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாமக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. மேலும் வரவிருக்கும் நகராட்சி தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிடும என்றெ கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளளது. இந்நிலையில், சமீபத்தில் கட்சி தொண்டர்களுடன் உரையாற்றிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கூட்டணி கட்சிகள் கூட்டணி தர்மத்தை மீறியதால் பாமக தோல்வியடைந்தது என்று கூறியிருந்தார்.
மேலும் 2 கோடி வன்னியர் மக்கள் உள்ள தமிழகத்தில் பாமகவுக்கு 23 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது என்றும், நாம் 23 தொகுதிளும் அல்லது குறைந்தபட்சம் 15 தொகுதிகளாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் கூட்டணி தர்மம் மீறியதால், 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்ததது. இது வேதனைக்குறிய ஒன்று என்று கூறியிருந்தார். டாக்டர் ராமதாஸின் இந்த பேச்சு அதிமுகவினரிடையே மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று சேலம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம், டாக்டர் ராமதாஸ் கூட்டணி தர்மம் பற்றி பேசியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், கூட்டணி துரோகம் செய்துவிட்டது என்று கூறினால் என்ன துரோகம் என்று அவரிடம் கேளுங்கள் என்ன துரோகம் என்று சொன்னால் தான் நாங்கள் அதற்கு பதில் சொல்ல முடியும் என்று கூறியுள்ளார்.
மேலும் பாமக வெற்றியை தடுத்துவிட்டதாக கூறியது குறித்து கேள்விக்கு மக்கள் தான் ஓட்டு போட வேண்டும் நீங்ளோ நானே ஓட்டு போட்டு வெற்றி பெற வைக்க முடியாது. தற்போது பாமக கூட்டணியில் இல்லை என்றும் தேர்தல் வரும்போதெல்லாம் கூட்டணி தாவுவது பாமகவின் வாடிக்கை என்று எடப்பாடி பழனிச்சாமி கடுமையான விமர்சித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil