அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை டிசம்பர் 12-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தவிட்டுள்னர் .
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஜூன் மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுக்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தரப்பில மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று உத்தரவிட்டது.
தொடர்ந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதனிடையே தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து ஒ.பி.எஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த விசாரணையில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிடக்கோரிதோடு மட்டுமல்லாமல் வழக்கை முடித்து வைக்கவும், இபிஎஸ் தரப்பு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டால் கட்சி செயல்பட முடியாத நிலையில் உள்ளது. எனவே இதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஆனால் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், ஒ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கை டிசம்பர் 12-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்க, மனு தாக்கல் செய்யுமாறு இபிஎஸ் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/