அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை வேறு நாளுக்கு மாற்ற கோரி ஒ.பி.எஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரிய விஸ்வரூம் எடுத்த நிலையில், கடந்த ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச்செயலாளராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஒ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிக்கை வெளியிடப்பட்டது.
இதனிடையே அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஒபிஎஸ் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் தீர்ப்புக்கு தடை விதிக்க கூடாது என்ற முடிவு எட்டும் வரை அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படாது என்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் சுதான்சு தூலியா ஆகியோர் விசாரணையை வரும் டிசம்பர் 6-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
இதற்கி்டையே அதிமுக பொதுக்குழு வழக்கை டிசம்பர் 6-ந் தேதிக்கு பதிலாக 11-ந் தேதி விசாரிக்க வேண்டும் என்று ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதில் மனுவாக கட்சி செயல்பாடுகள் பாதிக்கப்படுவதால் விசாரணை தேதியை மாற்றம் செய்யாமல் ஏற்கனவே குறிப்பிட்டதைபோல் டிசம்பர் 6-ந் தேதியே விசாரணை நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது
இந்த இரு மனுக்களையும் பரிசீலித்த நீதிபதிகள், திட்டமிட்டபடி டிசம்பர் 6-ந் தேதி வழக்கு விசாரணை நடைபெறும் என்று கூறி ஒபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தனர். மேலும் அன்றைய பட்டியலில் இருந்து மாற்றக்கூடாது என்று எத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை விசாரிப்பதில் என்ன சிக்கல் உள்ளது டிசம்பர் 6-ந் தேதி தெரிக்க வேண்டும் என்று ஒபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil