தண்டனை பெற்ற பொன்முடி : திருக்கோவிலூர் தொகுதியை காலி என அறிவிக்க கோரி அ.தி.மு.க சார்பில் மனு

கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் இருந்தபோது பொன்முடி கனிமவளத்துறை அமைச்சராக இருந்தார்.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் இருந்தபோது பொன்முடி கனிமவளத்துறை அமைச்சராக இருந்தார்.

author-image
WebDesk
New Update
ponmudi vijayabhaskar Sundaram

பொன்முடி - விஜயபாஸ்கர்

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதியை காலி தொகுதி என்று அறிவிக்க கோரி அதிமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது.

Advertisment

தமிழக சட்டசபையில் உயற்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், திருக்கோவிலூர் தி.மு.க. சார்பில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருந்தார். இதனிடையே கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் இருந்தபோது பொன்முடி கனிமவளத்துறை அமைச்சராக இருந்தார்.

இந்த காலக்கட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக 1.74 கோடி சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி பொன்முடி மற்றும் அவரது மனைவி சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 21-ந் தேதி, பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், இன்றுவரை திருக்கோவிலூர் தொகுதி நிலவரம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுல்லதால், அவர் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதியை காலியான தொகுதி என்று அறிவிக்க வேண்டும் என அ.தி.மு.க சார்பில், சபாநாயகரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

சட்டப்பேரவை செயலாளரிடம் இன்று பேசிய அ.தி.மு.க.வினர் சமீபததில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணியின் விளவங்காடு தொகுதி உடனயாக காலி தொகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொன்முடியின் திருக்கோலிலூர் தொகுதி மட்டும் காலி என்று அறிவிக்க ஏன் இவ்வளவு தாமதம் என்று கேள்வி எழுப்பினர். உச்சநீதிமன்றத்தில் இருந்து கோப்புகள் வர தாமதமாவதால், அதற்கான வேலைகள் நடைபெறுகிறது. விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளர்.

அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயபாஸ்கர் தளவாய் சுந்தரம் ஆகியோர் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனை சந்தித்து இது தொடர்பான மனு அளித்துள்ள நிலையில், இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ponmudi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: