Advertisment

அனைத்து தரப்பினர் எதிர்ப்பையும் ஆளுனர் சம்பாதித்து விட்டார்: புகழேந்தி பேட்டி

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓ.பி.எஸ் தரப்பைச் சேர்ந்த புகழேந்தி இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

author-image
WebDesk
New Update
அனைத்து தரப்பினர் எதிர்ப்பையும் ஆளுனர் சம்பாதித்து விட்டார்: புகழேந்தி பேட்டி

ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழக்கை ஒரு வாரம் நன்கு விசாரித்துள்ளனர்  எம்.ஜி.ஆர். ஜெ. அரசியல் வாரிசு ஓபிஸ்"க்கு தான் ஆதரவாக தீர்ப்பு வரும். சட்டசபையில் இருந்து பொதுவாக எதிர்க்கட்சிகள் தான் வெளிநடப்பு செய்யும் ஆனால் ஆளுநரே வெளிநடப்பு செய்தது அதிர்ச்சி அளிக்கின்றது. ஆளுநர் திராவிட தலைவர்கள் பெயரையே உச்சரிக்க தவிர்த்து அனைவரது எதிப்பையும் சாம்பாதித்து விட்டார் என்று  அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

Advertisment

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓ.பி.எஸ் தரப்பைச் சேர்ந்த புகழேந்தி இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில்,

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் முழுமையாக விசாரித்துள்ளது. நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வு தெளிவாக அனைத்து விஷயங்களையும் கேட்டு உள்ளனர். உச்சநீதிமன்றத்தில் நிச்சயம் ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக தான் தீர்ப்பு வரும். ஓபிஎஸ் தான் அதிமுகவின் தலைமையை ஏற்பார். உயர் நீதிமன்றத்தில் ஈ.பி.எஸ் தரப்பு பொதுக்குழு தொடர்பாக தவறாக வழி நடத்தியுள்ளார்கள். அவர்கள் கூறிய பொய்கள் எல்லாம் இந்த முறை எடுபடாது.

பொதுக்குழு தான் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு. இ.பி.எஸ் அர்த்தமே இல்லாமல் சட்டமன்றத்திற்கும் கருப்பு சட்டை அணிந்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியை விட எஸ்.பி.வேலுமணி தெளிவானவர்.இ.பி.எஸ்க்கு பதிலாக வேலுமணி வழி நடத்தலாம்.  சட்டமன்றத்தில் ஆளுநர் திராவிட இயக்க தலைவர்களின் பெயர்களை கூறாமல் தவிர்த்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்காக திமுக ஆளுநருடன் தினமும் மோதல் போக்கை கடைபிடிக்கக்கூடாது.

சட்டமன்றத்தில் நடந்த விவகாரத்தை இத்துடன் விட்டுவிட வேண்டும். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தான் வெளிநடப்பு செய்யும். ஆனால் ஆளுநர் வெளிநடப்பு செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. ஆளுநர் செயல்பட்ட விதத்தின் மூலம் அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்து விட்டார். திமுக அரசு கோடநாடு வழக்கை ஒரு வருடம் வைத்து விசாரித்து கோட்டை விட்டுவிட்டு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைத்துள்ளார்கள். முதல்வர் தேர்தல் நேரத்தில் ஒன்றரை மணி நேரம் கோடநாடு வழக்கு பற்றி பேசினார். ஆனால் தற்போது வரை ஏன் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என சட்டமன்றத்தில் இ.பி.எஸ் பேசுகிறார். கோடநாடு கொலை வழக்கில் சிக்கியுள்ள இ.பி.எஸ், தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்ற இ.பி.எஸ் சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது. சட்டமன்றத்தில் முதல்வர் கோடநாடு வழக்கு பற்றி பேச தொடங்கியதுமே இ.பி.எஸ் உடனே வெளிநடப்பு செய்கிறார். அப்பன் புதிருக்குள் இல்லை என்பதைப் போல உள்ளது இ.பி.எஸ் இன் நடவடிக்கை.

முதல்வர் கோடநாடு வழக்கு பற்றி பேசியபோது ஈ.பி.எஸ் சட்டமன்றத்தில் எதிர்த்து பேசியிருக்க வேண்டும். அப்போது பேசாமல் ஏன் ஒதுங்கினார். ஓ.பி.எஸ் விரைவில் கோவைக்கு வருவார்."ஆளுநர் அரசியல்வாதி இல்லை என்பதை அவர் உணர வேண்டும். சட்டமன்றத்தில் திராவிட இயக்க தலைவர்களின் பெயர்களை உச்சரிக்காததை ஏற்றுக் கொள்ள முடியாது. திமுக அரசு ஆளுநருடன் மோதல் போக்கை கைவிட வேண்டும். ஆளுநரைப் பற்றி தவறாகப் பேச வேண்டாம்.

"கோடநாடு மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள இவர்கள் இன்னும் ஏன் கைதாமல் இருக்கிறார்கள். நாங்கள் அதிமுக அழிந்து விடக்கூடாது என்பதில் அக்கறையாக உள்ளோம். அதிமுக பிரிந்து விட வேண்டாம் என திமுகவினர் கூட என்னிடம் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் 55 ஆண்டுகள் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்த நிலை போய் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வர காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அனுமதித்து விடக்கூடாது. அதிமுகவை அழிக்கும் வேலையை தான் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார்.

அதிமுகவில் மெகா கூட்டணி எங்கு உள்ளது. பாமக வெளியே சென்றுவிட்டது, தேமுதிகவை வெளியேற்றிவிட்டார்கள். குஜராத் முதல்வர் பதவியேற்புக்கு அகமதாபாத் சென்றபோது பிரதமர் மோடி கூட ஓ.பி.எஸ்-ஐ தனிப்பட்ட முறையில் விசாரித்தார். ஓ.பி.எஸ்-ஐ நம்பி தலைவர்கள் கூட்டணிக்கு வருவார்கள். எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்கிறார். அவரை நம்பி யாரும் கூட்டணிக்கு வரமாட்டார்கள்.

ஓ.பி.எஸ் இப்போதும் அதிமுக ஒருங்கிணைப்பிற்கு தயாராக உள்ளார். மூன்று நான்கு பிரிவுகளாக இருக்கும் அதிமுக ஒன்றாக செயல்பட வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம். இப்படி நான்கு பிரிவுகளாக இருந்தால் திமுகவிற்கு தேர்தலே தேவையில்லை என்று தெரிவித்தார் புகழேந்தி.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment