தமிழகத்தில் கொரோனா தொற்று நெருங்கடிக்கு மத்தியில், அதிமுகவில் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே அறிக்கை யுத்தம்நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு முதல்வராக இருந்த ஒபிஎஸ் பதவியில் இருந்து இறக்கப்பட்டு இபிஎஸ் முதல்வராக பொறுப்பேற்றார். அது முதல் அதிமுக ஆட்சியில் இருந்த வரை இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இது அதிமுக ஆட்சியில் இருந்த வரை பெரிதாக வெடிக்காத நிலையில், தற்போது தேர்தலில் தோல்வியுற்றதால் இருவருக்கும் இடையே இருந்த மோதல் பகிரங்கமாக வெளிவந்துள்ளது.
இதனை வெளிப்படுத்தும் விதமாக கடந்த சில வாரங்களாக இருவரும் தனிப்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர், இதில் கடந்த மே மாத தொடக்கத்தில் சென்னை ஜே.ஜே.நகரில் அம்மா உணவகம் திமுகவினரால் சேதப்படுத்த்ப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த ஒபிஎஸ், ‘அம்மா உணவகம் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. குற்றத்தில் தொடர்புடையவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் ’என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தொடர்ந்து மே 5 ஆம் தேதி, அம்மா உணவகம் மீதான காழ்ப்புணர்ச்சியைக் கண்டித்து ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. இதனையடுத்து தமிழகத்தில் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்றதை தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் அதிமுகவில் பெரும் சர்ச்சை எழுந்தது. இதில் எதிர்கட்சி தலைவர் பதவிக்காக பிஸ் இபிஎஸ் இருவரும் போட்டி போட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் யார் என்பது குறித்து கட்சி ஒரு சில உயர் மட்டக் கூட்டங்களைக் நடத்தி சில நாட்கள் இழுப்பறிக்கு பறகு எதிர்க்கட்சித் தலைவராக இ.பி.எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார், இது ஓ.பி.எஸ்க்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரான பொறுப்பேற்ற, இபிஎஸ் தமிழக மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் படுக்கைகள் வேண்டும் என்றும், மாநிலத்திற்கு அதிக ஆக்ஸிஜன், கோவிட் தடுப்பூசி வழங்கப்படுவதையும், தமிழக மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதில் தனது பங்கிற்கு ஒபிஎஸ், மாநிலத்தில் கறுப்பு பூஞ்சை தொற்றுநோயான மியூகோமைகோசிஸைக் கட்டுப்படுத்தவும், போதுமான கொரோனா தடுப்பூசிகளை வழங்கவும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், மே 25 அன்று, பழனிசாமி தனது தனிப்பட்ட அறிக்கையில், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கைகளை அதிகரிக்கவும், மாநிலத்தில் கொரோனா இறப்புகளைக் குறைப்பதற்கான வழிகளைக் கணக்கிடவும் மாநில அரசை வலியுறுத்தினார்.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபீல் கட்சியில் இருந்து விலகியபோது, இது கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகக் மே 21 அன்று ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருவரும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர், இவர்கள் இருவரும் தனித்தனி அறக்கை விடுவது கட்சி தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது எங்கே போய் முடியுமோ என்று வருத்தத்தில் உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.