scorecardresearch

Tamil News: இன்று தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

Tamilnadu Agriculture Budget 2022 TN Budget 2022-23 Ukraine Russia latest news Live Updates 19 March 2022 இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil News: இன்று தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 135-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamilnadu News Update: தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கலாகிறது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். புதிய அறிவிப்புகளும், சலுகைகளும் இடம்பெறும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகாவிற்கு பிறகு வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் 3ஆவது மாநிலம் தமிழகம் ஆகும்.

இணைய வசதி இல்லாமல் பணப் பரிவர்த்தனை!

இந்தியாவில் இணைய வசதி இல்லாமல், பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வகையில், ’UPI  லைட்’ என்ற புதிய வசதியை அறிமுகம் செய்யவுள்ளதாக, தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் அறிவித்துள்ளது. இதில் பணப் பரிவர்த்தனையின் உச்ச வரம்பு  ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tamil News LIVE Updates:

உலகின் மகிழ்ச்சியான நாடுகளுக்கான தரவரிசைப்பட்டியலில் தொடர்ந்து, 5வது முறையாக பின்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. டென்மார்க் 2வது இடத்திலும், 3வது இடத்தில் ஐஸ்லாந்து நாடுகளும் உள்ளன. 150 நாடுகள் இடம்பெற்ற இப்பட்டியலில், இந்தியா 136வது இடத்தை பிடித்துள்ளது என ஐ.நா. தெரிவித்துள்ளது. மக்களின் ஆயுட்காலம், தனிப்பட்ட நல்வாழ்வு, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசை வெளியிடப்படுகிறது.

ரஷ்யா கொண்டாட்டம்!

உக்ரைன் நாட்டின் மீதான போர் தொடுப்பு ரஷ்ய நாட்டுக்கு எதிராக பல விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இதற்கு நடுவே கிரீமியாவை இணைத்துக் கொண்டதன் 8வது ஆண்டு விழாவை ரஷ்யா கொண்டாடியது. மாஸ்கோவில் லட்சகணக்கோருக்கு மத்தியில் அதிபர் புதின் உற்சாக உரையாற்றினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
22:03 (IST) 19 Mar 2022
சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தில் முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் – திருச்சி சிவா

சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை பொருத்தவரை யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முதல்வர் முடிவு எடுப்பார். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை என சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்

20:34 (IST) 19 Mar 2022
இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பான் நிறுவனங்கள் முன்வருமாறு பிரதமர் மோடி அழைப்பு

ஜப்பான் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க இந்தியா தயார் உள்ளது. எனவே இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பான் நிறுவனங்கள் முன்வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்

மேலும், இந்தியாவில் பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் மற்றும் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளன என்றும், இந்தியா, ஜப்பான் இருதரப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

20:22 (IST) 19 Mar 2022
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு; முதல் பகுதிக்கான முடிவுகள் வெளியீடு

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் முதல் பகுதிக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2 பகுதிகளாக நடத்தப்பட்டது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை பள்ளிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது

20:06 (IST) 19 Mar 2022
மதுரையில் முத்தரையர் சிலையினை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

மதுரை ஆனையூரில் பெரும்பிடுகு முத்தரையர் சிலையினை திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

19:30 (IST) 19 Mar 2022
மெட்ரோவில் அதிகமாக பயணம் செய்தால் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பரிசு

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு கூப்பன் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஒரு மாதத்தில் அதிகமாக பயணம் செய்யும் முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மாதம் ரூ.1,500க்கு மேல் பரிவர்த்தனை செய்த 10 பயனாளிகளுக்கு ரூ.2,000 மதிப்பிலான பரிசு கூப்பன் வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது

19:09 (IST) 19 Mar 2022
வேளாண் பட்ஜெட் – மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு

வேளாண் சார்ந்த அனைத்து அங்கங்களும் மேன்மையடையும் வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விளைபொருட்கள் ஏற்றுமதிக்காக 2 ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு ஏற்றுமதி அளவை உயர்த்திட உதவும். சி’ மற்றும் ‘டி’ வாய்க்கால்கள் 550 கி.மீ.க்கு தூர் வாரப்படும் என்ற அறிவிப்பு குறுவை சாகுபடியில் மீண்டும் தமிழகம் சாதனைப் படைக்க உதவும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்

18:29 (IST) 19 Mar 2022
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்; பட்ஜெட் விவாதத்தில் அதிமுகவின் செயல்பாடு குறித்து ஆலோசனை

சென்னை, ராயப்பேட்டையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்து வருகிறது. இதில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுகவின் செயல்பாடு குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது

18:12 (IST) 19 Mar 2022
உழவர்களை ஊக்குவிக்கும் பட்ஜெட்– திருமாவளவன்

வேளாண் பட்ஜெட் உழவர் பெருமக்களை ஊக்குவிப்பதாக உள்ளது. உணவுப் பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும், உழவர்களின் முன்னேற்றத்துக்கும் வழி வகுத்துள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்

18:05 (IST) 19 Mar 2022
1 மாதத்திற்குள் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு – பஞ்சாப் அரசு ஒப்புதல்

பஞ்சாபில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இது, ஒரு மாதத்திற்குள் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அறிவிப்பாணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கும் என்ற ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதி ஆகும்.

17:57 (IST) 19 Mar 2022
தொழில் தொடங்க ரூ.1லட்சம் போதுமானதா? – தினகரன் கேள்வி

வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க நிதி வழங்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது பாராட்டிற்குரியது. ஆனால், தொழில் தொடங்க ரூ.1லட்சம் போதுமானதா என்ற எதார்த்தத்தை அரசு உணர வேண்டும் என தினகரன் கூறியுள்ளார்

17:48 (IST) 19 Mar 2022
டெல்லியில் பிரதமர் மோடி – ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடி – ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்து வருகின்றனர். ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்று முதன்முறையாக கிஷிடா இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

17:34 (IST) 19 Mar 2022
திருநங்கைகளுக்கு கட்டண சலுகை – சென்னை பல்கலை. அறிவிப்பு

திருநங்கைகள் படிக்க முன்வந்தால், அவர்களுக்கான கட்டணத்தை பல்கலைக்கழகமே ஏற்றுக்கொள்ளும் என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்

17:17 (IST) 19 Mar 2022
வேளாண்மைத் துறையின் புரட்சிக்கு வித்திடும் பட்ஜெட் – வைகோ அறிக்கை

வேளாண்மைத் துறையின் புரட்சிக்கு வித்திடும் வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை உள்ளது. இயற்கை வேளாண் சாகுபடி பயிற்சி, சூரியகாந்தி சாகுபடி அதிகரிப்பு போன்ற அறிவிப்புகள் வேளாண்துறையை உச்சத்திற்கு செல்ல வழிவகுக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்

16:34 (IST) 19 Mar 2022
2 நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார் ஜப்பான் பிரதமர்

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா 2 நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். டெல்லி வந்த கிஷிடாவிற்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்று முதன்முறையாக கிஷிடா இந்தியா பயணம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

16:32 (IST) 19 Mar 2022
கொடநாடு வழக்கில் சாட்சி விசாரணையை நடத்தும்படி உத்தரவிட முடியாது -சென்னை உயர்நீதிமன்றம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல்விசாரணை நடந்து வருவதால், சாட்சி விசாரணையை நடத்தும்படி உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா, ஈபிஎஸ் உள்ளிட்டோரை இணைக்கக் கோரி குற்றம்சாட்டப்பட்ட தீபு தொடர்ந்த வழக்கில்இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.

15:52 (IST) 19 Mar 2022
திண்டிவனம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் ஜப்தி

திண்டிவனம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் ரூ.15.94 லட்சம் வரி பாக்கி செலுத்தாததால் டேபிள், சேர்கள் மற்றும் பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டு திண்டிவனம் நகராட்சி ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

15:45 (IST) 19 Mar 2022
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

15:41 (IST) 19 Mar 2022
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பாராட்டு

உழவே தலை என்ற உன்னத நோக்கம் கொண்டதாக நிதிநிலை அறிக்கையை உருவாக்கிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு பாராட்டுகள் ஒவ்வொரு திட்டமும், உழவர் பெருமக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்வதாக அமையப் போகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

14:58 (IST) 19 Mar 2022
ஐ.ஐ.டி-யில் மான்கள் இறப்பு – ஆந்த்ராக்ஸ் காரணமில்லை

சென்னை ஐஐடி வளாகத்தில் மான்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து நடைபெற்ற விசாரணையில், ஆந்த்ராக்ஸ் நோயால் மான்கள் உயிரிழக்கவில்லை என்று கால்நடை மருத்துவப் பல்கலை. ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

14:58 (IST) 19 Mar 2022
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மகளிர் அணி இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது

14:14 (IST) 19 Mar 2022
எதிர்ட்சி தலைவர் ஈபிஎஸ் விமர்சனம்

தமிழக அரசின் வேளான் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் விளம்பர என்று எதிர்ட்சி தலைவர் ஈபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.

14:11 (IST) 19 Mar 2022
மின்சார ரயில் டிக்கெட்களை மெட்ரோ ரயில் மெட்ரோ ரயில் நிலையங்களில் பெற ஏற்பாடு

மின்சார ரயில் டிக்கெட்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெரும் வசதி விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், எழும்பூர், சென்ட்ரல், கிண்டி மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில் டிக்கெட்டினை பெற ஏற்பாடு செய்யப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

13:58 (IST) 19 Mar 2022
தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – விஜயகாந்த்!

தமிழக அரசின் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், “பட்ஜெட்டில் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. வாக்குறுதிகள், அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு குறித்து அறிவிப்பு இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

13:42 (IST) 19 Mar 2022
மார்ச் 31-க்குள் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு!

மார்ச் 31-க்குள் 14 லட்சத்து 40 ஆயிரம் பேரின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

13:27 (IST) 19 Mar 2022
‘நம்ம ஊரு திருவிழா’ சென்னை தீவுத்திடலில் வரும் 21ஆம் தேதி தொடக்கம்!

சென்னையில் நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் விதமாக 'நம்ம ஊரு திருவிழா' நடத்தப்படுகிறது. இந்த விழா கலை பண்பாட்டுத்துறை, சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்பட இருக்கிறது. சென்னை தீவுத்திடலில் வரும் 21ஆம் தேதி தொடங்கும் இவ்விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

13:25 (IST) 19 Mar 2022
வானிலை செய்திகள்!

கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13:07 (IST) 19 Mar 2022
மோடியை தூக்கிலிட வேண்டும் என்று பேசிய விவகாரம்: ஜமால் உஸ்மான் கைது!

பிரதமர் மோடியை தூக்கிலிட வேண்டும் என்று பொது மேடையில் பேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் மாநில நிர்வாகி ஜமால் உஸ்மான் கைது தஞ்சை எஸ்.பி நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜமால் உஸ்மானை திருக்கானூர்பட்டி பகுதியில் போலீசார் கைது செய்தனர்

13:05 (IST) 19 Mar 2022
திண்டிவனம், தேனி, மணப்பாறையில் ரூ.381 கோடியில் உணவு பூங்காக்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் வேளாண் பட்ஜெட்டில், டெல்டா மாவட்டங்களில் 4964 கி.மீ. நீளமுள்ள கால்வாய்கள், வாய்க்கால்களை தூர்வார ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், திண்டிவனம், தேனி, மணப்பாறையில் ரூ.381 கோடியில் உணவு பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும் வேளாண் மையங்களில் பணமில்லா பரிவர்த்தனைக்கு வித்திடும் என்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

12:44 (IST) 19 Mar 2022
8 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் வேளாண் பட்ஜெட்டில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், 8 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம், வேளாண் மையங்களில் பணமில்லா பரிவர்த்தனைக்கு வித்திடும் என்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

12:20 (IST) 19 Mar 2022
தமிழக பட்ஜெட்: வேளாண்துறைக்கு மொத்தமாக ரூ.33,007 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழக சட்டப்பேரவையில் 2வது முறையாக வேளாண்துறைக்கென தனி பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதன்படி வேளாண்துறைக்கு மொத்தமாக ரூ.33,007 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு வேளாண்துறைக்கு ரூ. 32,775.78 கோடி ஒதுக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

12:17 (IST) 19 Mar 2022
திமுக ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் – எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை அரசு முறையாக பாதுகாப்பதில்லை என்று குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

12:07 (IST) 19 Mar 2022
175 கோடியில் புதிய நீர்வழிப்பாதை மேம்பாடு 2.0 திட்டம் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில்,

தென்னை, மா, கொய்யா, வாழை தோட்டங்களில் ஊடுபயிர்களை ஊக்குவிக்க ரூ.27.51 கோடி ஒதுக்கீடு

தேனீ வளர்ப்பு திட்டத்துக்கு ₨10.25 கோடி ஒதுக்கீடு

ரூ.175 கோடியில் புதிய நீர்வழிப்பாதை மேம்பாடு 2.0 திட்டம்

பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு

விவசாய பணிகளில் ட்ரோன்களின் பயன்பாட்டுக்கு ரூ.10 கோடியில் திட்டம்

உழவர் சந்தைகளில் மாலை நேரத்திலும் சிறுதானியம், பயிறு வகைகள் விற்பனை செய்ய நடவடிக்கை

பயிர் காப்பீடு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.2,546 கோடி ஒதுக்கீடு

அரசு மாணவியர் விடுதிகளில் காய்கறி, பழங்கள், மூலிகை தோட்டம்

200 விடுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் திட்டம்” என்று அறிவித்துள்ளார்.

11:52 (IST) 19 Mar 2022
சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்க ரூ10 கோடி ஒதுக்கீடு – பட்ஜெட்டில் அறிவிப்பு

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில்,

“புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் மானியத்தில் வழங்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்க ரூ10 கோடி ஒதுக்கீடு

சிறு தானிய, எண்ணெய் வித்து மதிப்பு கூட்டு இயந்திரங்கள் மானியத்தில் வழங்க ரூ5 கோடி நிதி ஒதுக்கீடு

ரூ. 65 கோடியில் 3 ஆயிரம் விவசாயிகளுக்கு சோலார் பம்புசெட்கள் வழங்கப்படும்

செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்பு செட்டுகள் அமைக்க ரூ.1.50 கோடி ஒதுக்கீடு

வேளாண் பண்ணை குட்டைகள் அமைக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு

டெல்டா பகுதியில் பாசன கால்வாய்களை தூர்வார ரூ.5 கோடி ஒதுக்கீடு

வேளாண் சந்தை மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு

38 கிராமங்களில் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் மையங்கள் அமைக்க ரூ.95 கோடி ஒதுக்கீடு” என்று தெரிவித்துள்ளார்.

11:34 (IST) 19 Mar 2022
பனை மரம் ஏறும் கருவியை கண்டுபிடிப்பவர்களுக்கு விருது – பட்ஜெட்டில் அறிவிப்பு

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில்,

விதை முதல் விளைச்சல் வரை மின்னணு முறையில் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்

ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம்

இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும்

பயிர்களில் பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்த ₨5 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு

பனை மரம் ஏறும் கருவியை கண்டுபிடிப்பவர்களுக்கு விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

11:16 (IST) 19 Mar 2022
சீர்மிகு நெல் சாகுபடி திட்டம் – பட்ஜெட்டில் அறிவிப்பு

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில்,

“19 லட்சம் ஹெக்டேரில், ரூ. 32.48 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நெல் சாகுபடி திட்டம்

28.50 கோடியில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரிக்கப்படும்

ரூ. 27 கோடியில் ஊடுபயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த தொகுப்பு வழங்கும் திட்டம்

19 லட்சம் ஹெக்டேரில், ரூ. 32.48 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நெல் சாகுபடி திட்டம்

வேளாண் துறையிலும், மின்னணு வேளாண் திட்டம் ஏற்படுத்தப்படும் “என்று தெரிவித்துள்ளார்.

11:01 (IST) 19 Mar 2022
மின்னணு வேளாண் திட்டம்!

வேளாண் துறையிலும், மின்னணு வேளாண் திட்டம் ஏற்படுத்தப்படும்.

விதை முதல் விளைச்சல் வரை மின்னணு முறையில் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்

11:01 (IST) 19 Mar 2022
வேளான் பட்ஜெட்டில் இடம்பெற்ற திட்டங்கள்!

ரூ. 27 கோடியில் ஊடுபயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த தொகுப்பு வழங்கும் திட்டம்

ரூ. 28.50 கோடியில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரிக்கப்படும்

கரும்பு டன் ஒன்றுக்கு 195 ரூபாய் ஊக்கத்தொகை

19 லட்சம் ஹெக்டேரில், ரூ. 32.48 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நெல் சாகுபடி திட்டம்

10:50 (IST) 19 Mar 2022
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்..

எண்ணெய் வித்து சாகுபடியை அதிகப்படுத்த ரூ. 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு

ரூ. 12 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு உயர் ரக மரங்கள் வழங்கி மரம் வளர்ப்பு திட்டம் ஊக்குவிக்கப்படும்

மதிப்பு கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்த 3 மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்க ரூ. 381 கோடி ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க, டான்ஜெட்கோவுக்கு ரூ. 5,157 கோடி நிதி ஒதுக்கீடு

சர்க்கரை ஆலைகளை நவீனப்படுத்த ரூ. 3 கோடி ஒதுக்கீடு

10:39 (IST) 19 Mar 2022
வேளாண் பட்ஜெட் 2022.. பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு!

நெல் அறுவடைக்குப்பின் பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு

வேளாண் சார்ந்த தொழில்களை தொடங்க பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி

பயிறு வகை விதைகளை மானியத்தில் வழங்க 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு

10:29 (IST) 19 Mar 2022
எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு ஒதுக்கீடு!

மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ. 71 கோடி நிதி ஒதுக்கீடு

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி நிதி ஒதுக்கீடு

60,000 தமிழக விவசாயிகளுக்கு தார்பாய் வழங்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்க ரூ. 15 கோடி ஒதுக்கீடு

10:19 (IST) 19 Mar 2022
வேளாண் துறை பட்ஜெட் தாக்கல்!

தமிழக சட்டப்பேரவையில் 2வது முறையாக வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அமைச்சர் பட்ஜெட் உரை

விவசாயிகள் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்ற நிலைபாட்டோடு அறிமுகப்படுத்தப்பட்டது தான் வேளாண் பட்ஜெட்.

உழவு தொழில் உன்னதம் நிறைந்தது என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்.

கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 86 அறிவிப்புகளில், 80 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியீடு

விவசாயிகளுக்கு இடுபொருள் மானியமாக ரூ. 154 கோடி வழங்கப்பட்டுள்ளது

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண சிறப்பு குழு அமைப்பு

09:57 (IST) 19 Mar 2022
கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் மேலும் 2,075 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்றுக்கு மேலும் 71 பேர் உயிரிழந்தனர்.

09:56 (IST) 19 Mar 2022
கருணாநிதி நினைவிடத்தில் வேளாண்துறை அமைச்சர் மரியாதை!

இன்று சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

09:56 (IST) 19 Mar 2022
டெலிகிராம் செயலிக்கு தடை!

பிரேசில் அரசுடன் ஒத்துழைக்க மறுத்ததால், நாட்டில் டெலிகிராம் செயலிக்கு தடை விதித்து பிரேசில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

09:56 (IST) 19 Mar 2022
கர்நாடக மாணவர் உடல் விரைவில் பெங்களூரு வருகிறது!

உக்ரைனில் உயிரிழந்த கர்நாடக மாணவர் உடல், நாளை மறுநாள் பெங்களூரு வருகிறது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

09:56 (IST) 19 Mar 2022
ஆந்த்ராக்ஸ் குணப்படுத்தக் கூடிய நோய்தான்!

ஐ.ஐ.டி.யில் உயிரிழந்த மான்களுக்கு ஆந்த்ராக்ஸ் தொற்றுதான் வந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு நடக்கிறது. ஆந்த்ராக்ஸ் குணப்படுத்தக் கூடிய நோய்தான், பதற்றப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

09:29 (IST) 19 Mar 2022
2021ம் ஆண்டுக்கு பின் சீனாவில் கொரோனா உயிரிழப்பு!

2021ம் ஆண்டுக்கு பின் சீனாவில், கொரோனா உயிரிழப்பு இல்லாத நிலையில் இப்போது ஒரே நாளில் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

09:29 (IST) 19 Mar 2022
தமிழகத்தில் இதுவரை 9.93 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

தமிழ்நாட்டில் 12 முதல் 14 வயது உடையவர்களுக்கு 3.61 லட்சம் பேருக்கும், 15 முதல் 18 வயது உடையவர்களுக்கு 28.25 லட்சம் பேருக்கும் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 9.93 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன -அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

08:58 (IST) 19 Mar 2022
ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை!

டெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா – ஜப்பான் இடையேயான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

08:58 (IST) 19 Mar 2022
பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் இன்று பதவியேற்பு!

பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

Web Title: Tamilnadu agriculture budget 2022 tn budget 2022 23 ukraine russia latest news