TN Agri Budget 2025: நம்மாழ்வார் விருது முதல் ரூ. 1,427 கோடி பயிர் கடன் தள்ளுபடி வரை... விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்புகள்

நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2.5 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2.5 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
panneer

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் பொது பட்ஜெட் உடன் நேற்று தொடங்கியது. திமுக அரசு பொறுப்பேற்ற பின் 4வது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இன்றைய தினம் வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். முன்னதாக முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதையும் செலுத்தினார். தொடர்ந்து, சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

Advertisment

வேளாண் பட்ஜெட் 2025 - முக்கிய அறிவிப்புகள்:

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு. இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20,000ல் இருந்து ரூ.30,000 உயர்த்தப்படும் என எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார்.  2025-26-ல், ரூ. 1,427 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2.5 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

Advertisment
Advertisements

63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில் ரூ. 22.80 லட்சம் மானியம் வழங்கிடப்படும். இத்திட்டத்துக்கு ரூ. 22 கோடி ஒதுக்கீடு. முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும். 

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு. இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20,000ல் இருந்து ரூ.30,000 உயர்த்தப்படும். இறுதி சடங்கு நிதி உதவி ரூ. 2,500ல் இருந்து ரூ. 10,000 உயர்வு. 

இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் வருவாய் இழப்புக்காக பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.841 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முதலமைச்சர் மன்னுயிர் காப்போம் திட்டம், ரூ. 146 கோடி செலவில் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும். கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சியில் ரூ. 269 கோடியில் செயல்படுத்தப்படும். ஏற்கனவே இத்திட்டம் 10,157 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது.

சூரியகாந்தி, ஆமணக்கு எண்ணெய் உள்ளிட்ட வித்து பயிர்கள் வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாக, 2 லட்சம் ஏக்கர் பரப்பில் ரூ. 108 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம், 7.14 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 90 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவர்.

இயற்கை வேளாண்மைக்கான திட்டம் ரூ. 12 கோடியில், 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மை பொருட்களை சந்தைபடுத்த அரசு கட்டிடங்களில் வசதி ஏற்படுத்தி தரப்படும்.

சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ. 52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பண்ணையம் உள்ளிட்ட திட்டங்களில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின உழவர்களுக்கு கூடுதல் மானியம். தற்போதுள்ள 40% மானியம் 60%-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

அதிக உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருது வழங்க ரூ. 55 லட்சம் ஒதுக்கீடு. நம்மாழ்வார் விருது திட்டம் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும். 

1 லட்சம் ஏக்கரில், ரூ. 12 கோடியில் மாற்று பயிர் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும். ரூ. 15 கோடியில், 7 அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். * டெல்டா அல்லாத பயிர் சாகுபடியை அதிகரிக்க 102 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் மூலம் 3,000 மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிப்பு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படும். பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, ரூ. 12 கோடியில் பருத்தி சாகுபடி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். * 30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகையாக ரூ.5,242 கோடி வழங்கப்பட்டுள்ளது.

Mrk Panneerselvam TN Budget

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: