TN AgTamil Nadu Agriculture Budget 2021-22 : தமிழகத்தில் முதன்முறையாக வேளாண் துறைக்கு தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 13/08/2021 அன்று தமிழகத்தின் நிதி நிலை அறிக்கையை பி.டி.ஆர். தாக்கல் செய்த நிலையில் இன்று தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார். அது தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் நீங்கள் இந்த செய்தி தொகுப்பில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
பெட்ரோல் விலை குறைப்பு
தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ 3.02 குறைந்து ரூ 99.47 ஆகவும், டீசல் விலையில் கடந்த 31 நாட்களாக மாற்றமின்றி லிட்டருக்கு ரூ 94.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மின்சாரத் துறைக்கு ரூ.19,872.77 கோடி ஒதுக்கீடு
தமிழக பட்ஜெட்டில் மின்சாரத் துறைக்கு ரூ.19,872.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் 17,980 மெகாவாட் மொத்த மின்உற்பத்தி திறன் கூடுதலாக சேர்க்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பாடத்திட்டம் குறைப்பு
தமிழ்நாட்டில் 1- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்களைக் குறைத்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. குறைக்கப்பட்டப் பாடத்திட்டங்கள் அடிப்படையிலேயே தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு முதல்வர் ஸ்டாலின் தகைசால் தமிழர் விருதை வழங்கினார்
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சதம் 200 பந்துகளில் தனது 22வது சதத்தை பதிவு செய்துள்ளார். மேலும் ஏற்கனவே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஜோ ரூட சதமடித்தது குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லி ராஷ்டிரபதி பவனில் தேநீர் விருந்து அளித்தார்
விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது வரவேற்புக்கு உரியது. வேளான் பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பப்வை நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
தமிழக காவல்துறையில் 15 அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சேவைகள் பிரிவு ஏடிஜிபி அமரேஷ் புஜாரி, அமல்ராஜ், விமலா, நாவுக்கரசன், உள்ளிட்ட 15 அதிகாரிகளுக்கு பதக்கம் வழங்கப்படுகிறது.
மதுரை ஆதீனம் உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு வருகிறது. மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இறுதி சடங்கில் ஏராளமான ஆன்மிகவாதிகள், பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தூத்துக்குடி, சேலம், அரியலூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விருது வழங்கினார்
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே என்மீது பொய் வழக்கு போட்டு சோதனை நடத்தினார்கள், வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது, நேர்மையான அதிகாரிகளை நியமித்து, 100 நாட்களாக நல்ல முறையில் ஆட்சி நடக்கிறது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை வரவேற்கிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரமும் தலிபான்கள் வசமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. காபூல் நகரின் எல்லை வரை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். இதனால் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களிடம் உள்ள ரகசிய ஆவணங்களை உடனடியாக அழித்து விடுவிட்டு, பொருட்களுடன் அமெரிக்கா திரும்புமாறும் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் 58 அர்ச்சகர்களுக்கு பணி ஆணையை முதலமச்சர் முக. ஸ்டாலின் வழங்கி இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இன்று பணி நியமன ஆணை பெற்ற அர்ச்சகர்கள் 58 பேரில்பட்டியல் பிரிவு 5 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 6 பேர், பிற்படுத்தப்பட்டோர் 12 பேர் பொதுப்பிரிவை சேர்ந்தவர் 1 மேலும் பெண் ஓதுவார் ஒருவர் என தெரியவந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள். https://t.co/U0MxAMV5Yw
— கே.பாலகிருஷ்ணன் – K Balakrishnan (@kbcpim) August 14, 2021
பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் கைதான மீரா மிதுனை சென்னை அழைத்து வருகிறது சைபர் கிரைம் போலீஸ்
சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு 15-ஆம் தேதி காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படவுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு ஒவ்வொரு அணியும் 15 வீரர்கள், 8 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபை வரலாற்றில், முதல் முறையாக வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில், கிருஷ்ணகிரியில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தோட்டக்கலைக்கல்லூரி அமைக்கப்படும் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் தாக்கலின் போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாகப்பட்டினம், ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் தொழில் கற்கும் மையங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் 100 ஏக்கரில் அமைக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முதல் வேளாண் தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு மறைந்த முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நினைவிடத்தில் முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
திமுக அரசு ஆட்சி அமைத்து இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் தற்போது, சொன்னதை செய்வோம், செய்வதையே சொல்வோம் என்ற வகையில் செயல்பட்டு வருகிறோம். இந்த 100 நாட்களில் ஏராளமான சாதனைகளை இந்த அரசு செய்துள்ளது. இழந்த பெருமைகளை மீட்க நம்மால் முடியும் என்ற நம்பிக்கை தற்போது ஏற்பட்டுள்ளது.
வட்டார அளவில் விவசாயத்திற்கு தேவையான வேளாண் இயந்திரங்களை முன்பதிவு செய்ய செயலி, இணையதளம் ஆகியவற்றை உருவாக்கி அதன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு வழங்க 185 டிராக்டர்கள், 185 ரோட்டரேட்டர்கள், 4 மருந்து ட்ரோன்கள் கொள்முதல் செய்யப்படும்
சோலார் பவர் மூலம் இயங்கும் பம்பு செட்டுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் இந்த நிதி ஆண்டில் 10Hp கொண்ட 5000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில் நிறுவப்படும். இதற்கு ரூ. 114 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
நீலகிரி மாவட்டம் எடப்பள்ளியில் ஒருங்கிணைந்த வேளாண் சந்தை அமைக்கப்பட்டு அம்மாவட்டத்தில் விளைவிக்கப்படும் அனைத்து காய்கறிகளும் சந்தைப்படுத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலை சன்ன ரகத்திற்கு ரூ.70 லிருந்து ரூ.100 ஆக உயர்த்தி கொள்முதல் செய்யப்படும்.
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.150 வீதம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தபடும். இதன்மூலம் கரும்பு டன் ஒன்றிற்கு ரூ.2900 வீதம் விலையாக பெறுவர்.
சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகரங்களில் நடமாடும் காய்கறி அங்காடிகள் அமைக்கப்படும். முதற்கட்டமாக 30 காய்கறி அங்காடிகளை அமைக்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு ரூ. 2 லட்சம் மானியம் வழங்கப்படும் என்றும், உழவர் சந்தை விலையிலேயே அங்கும் காய்கறிகள் விற்கப்படும்.
மறைந்த இயற்கை விவசாயி நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் ரூ. 3 கோடி செலவில் அமைக்கப்படும் என்று எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ள்ளார்.
அகில இந்திய அளவில் மஞ்சள் உற்பத்தில் சிறந்து விளங்கும் ஈரோட்டில், பவானி சாகர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க ரூபாய் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்.
வேளாண்மையின் பெருமையை அடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ள சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 150 ஏக்கர் பரப்பில் தோட்டக்கலை கல்லூரி ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இந்த ஆண்டு கட்டுமான பணி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் 1000 ஹெக்டேர் பரப்பில் கீரை சாகுபாடி உற்பத்தி செய்ய ரூ. 95 கோடி நிதி ஒதுக்கீடு
பயிர் காப்பீடு திட்டத்தில் 2வது தவணையாக ரூ. 1,248.98 கோடி விரைவில் வெளியிடப்படும்
அண்ணா பண்ணை மேம்பாடு திட்டத்திற்கு ரூ.21.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1000 ஏக்கர் பரப்பளவில் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அருகே செயல்படும் அண்ணா பண்ணை, அண்ணா பன்முக வேளாண் செயல்விளக்க விதைப் பண்ணையாக மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர் பற்றாக்குறையை போக்க நடப்பாண்டில் சொட்டுநீர் பாசன முறை 20 ஆயிரம் ஹெக்டேரில் அமைக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
50 உழவர் சந்தைகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து மேம்படுத்த ரூ.12.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எண்ணெய் வித்துக்கள் திட்டத்திற்கு ரூ.25.13கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா தென்னை விவசாயிகளுக்காக தென்னை மதிப்பு கூட்டும் மையம் தஞ்சையில் அமைக்கப்படும் எனவும் பட்டுக்கோட்டையில் தென்னை வளர்ச்சி வாரிய துணை மண்டல மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.12.44கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி பழங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் சிறுதானியங்களை பதப்படுத்த மையம் அமைக்கப்படும் என்றும் குறுதானிய அரிசியை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து மாநகரங்களில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை குறைவான பகுதிகளில் விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் சாகுபடி பயிற்சி, சந்தைப்படுத்த வசதிகள் செய்யப்படும். கடலூர், விழுப்புரம், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் சிறுதானிய இயக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை குறைக்க விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பனை மரங்களை வேரோடு வெட்டி விற்பதை தடுக்க அரசால் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்படும் எனவும் வேளாண் அமைச்சர் கூறியுள்ளார்.
கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பனை தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குவிண்டால் சன்னரகத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.70லிருந்து ரூ.100ஆக உயர்த்தப்படும் என்றும் சாதாரண ரகத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.50லிருந்து ரூ.75ஆகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு குவிண்டால் நெல் சன்னரகம் ரூ.2,060, சாதாரண ரகம் ரூ.2,015க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிப்பு
வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
முதலமைச்சர் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.146.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுப்புக்கு 100 ஹெக்டேர் வீதம் நிலங்கள் கண்டறியப்பட்டு பண்ணை குட்டைகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்படும் எனவும் அறிவிப்பு
இயற்கை வேளாண் திட்டத்திற்கு ரூ.33.03 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மரபு சார் விதை நெல் உருவாக்கும் திட்டத்திற்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தில் ஒன்றான பள்ளுவகை இலக்கியத்தில் ஏராளமான நெல் பெயர்கள் காணப்படுகின்றன.
திருவள்ளூர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள அரசு விதைப்பண்ணைகளில் மரபு சார் விதை நெல்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகைக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மைத்துறையில் இயற்கை வேளாண்மைக்கு தனிப்பிரிவு உருவாக்கப்படும் என வேளாண் அமைச்சர் அறிவித்துள்ளார்.
நடப்பாண்டில் 2500 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் என வேளாண் அமைச்சர் அறிவித்துள்ளார்.
பனை மரத்தின் பரப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு நடப்பாண்டில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள், ஒரு லட்சம் பனங்கன்றுகள் மானியத்தில் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.