New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/07/Ops.jpg)
தமிழக அதிமுகவில், ஒற்றை தலைமை கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒற்றைத் தலைமைக்கு தகுதியானவர் எடப்பாடி பழனிசாமியே எனச்சொல்லி தொண்டர்கள் மத்தியில் அமோக வரவேற்பு எழுந்துள்ளது. மறுபுறம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மீண்டும் ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அதிமு வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விராலிமலை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக உள்ளார். அவருக்கு ஆதவராக சென்னையில் கட்சிக் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பணிகளை முன்னின்று கவனித்து வருகிறார்.
ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நகராட்சி முன்னாள் தலைவர் ராஜசேகரன் தலைமையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அதுவும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏவின் தொகுதியான விராலிமலை தொகுதி முழுவதும் ஆர்.ராஜசேகரனுடன், விராலிமலை முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் ராஜகிரி சுப்பையா ஆகியோரது படங்களுடன் ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு வரை விஜயபாஸ்கர், ராஜசேகர் ஆகியோர் இருவேறு துருவங்களாக செயல்பட்டு வந்தனர். இதனால், ஓபிஎஸ்ஸூக்கு ஆதரவாக அணி சேர்க்கப்படுவதைவிட விஜயபாஸ்கருக்கு எதிராக அணி சேர்க்கை நடைபெறுகிறதோ என அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவி வருகிறது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் புதுக்கோட்டை அதிமுகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக திருச்சி அதிமுகவில் தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டம் எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் மட்டும் ஓபிஎஸ்-க்கு ஆதரவு நிலைப்பாட்டினை தொடர்ந்துக்கொண்டிருக்கின்றார்.
அதே சமயம் அவரது மகன் ஜவஹர்லால் நேரு ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருமே இணைந்து செயல்பட்டு தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழியில் நின்றால் நாளை நமதே எனச்சொல்லி இரட்டை இலையை காப்பாற்ற வேண்டும் எனக்கோரிக்கை விடுத்து போஸ்டர் அடித்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.