எங்கள் கட்சியில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல சி.டி.ரவி யார் என்று அ.தி.மு.க.வின் செங்கை ஜி.ராமச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம் சென்றுகொண்டிருக்கும் நிலையில், மறுப்பக்கம் அதிமுக பொதுக்குழு விவகாரம் அதைவிட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்று சொல்லலாம். இதனிடையே பாஜகவின் மெலிய பொறுப்பாளர் சி.டி.ரவி இன்று அதிமுகவின் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரையும் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் தமிழகத்தின் நலன் கருதி அதிமுக இரு அணிகளும் ஒன்றினைய வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த சி.டி.ரவி கூறுகையில், 1972-ம் ஆண்டு அதிமுக தொடங்கப்பட்டபோது திமுகவை எம்ஜிஆர் தீயசக்தி என்று கூறினார். அந்த வார்த்தை தற்போதுவரை பொருந்துகிறது.
திமுக இப்போதுவரை தீயசக்தியாகத்தான் இருக்கிறது. எனவே திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுக இரு அணிகளும் ஒன்றிணைய வேண்டும். அதற்காகத்தான் இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் இருவரையும் சந்தித்தோம் என்று கூறியிருந்தார்.
சி.டி.ரவியின் இந்த கருத்து வைரலாக பரவிய நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
அதிமுகவில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல சி.டி.ரவி யார்? நீங்கள் ஒரு தேசியக் கட்சியில் இருந்து வருவதால் நீங்கள் எதையும் கட்டளையிட முடியும் என்று அர்த்தமா? பாஜக கர்நாடகாவை எப்படி நடத்த வேண்டும் என்று நாங்கள் சொன்னால் பரவாயில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
What makes you think that you can advise us when you have not won any election against DMK alone, whereas AIADMK ruled for 30+ years? Are you telling us what is தீயசக்தி and the reason why Puratchithalaivar MGR started our party in 1972? Seriously! Please know your limits! (2/2)
— Singai G Ramachandran (@RamaAIADMK) February 3, 2023
மேலும் 30 வருடங்கள் அதிமுக ஆட்சி செய்த தமிழகத்தில் திமுகவை மட்டும் எதிர்த்து எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறாத நீங்கள் எங்களுக்கு அறிவுரை கூறலாம் என்று நீங்கள் நினைப்பது எது? தீயசக்தி என்றால் என்ன, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 1972-ல் கட்சியை ஆரம்பித்ததற்கான காரணத்தை சொல்கிறீர்களா? தயவுசெய்து உங்கள் வரம்புகளை அறிந்து பேசுங்கள் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.