/indian-express-tamil/media/media_files/5W0xDmTn0ESV0Y3Pmqyt.jpg)
கோவை விமான நிலையத்தில் இ.பி.எஸ்
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில்,
வரிகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால் அதற்கு வட்டி வசூல் செய்யும் அரசாங்கமாக இந்த அரசு உள்ளது. மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டதில் இடம்பெற்றது தான் ஆசிரியர்களின் அந்த கோரிக்கை. அதனை அரசு பரிசீலித்து அவர்கள் அறிவித்த அறிவிப்பை நிறைவேற்ற வேண்டும்.
இந்த அரசாங்கம் ஒரு சர்வாதிகார போக்கில் உள்ளது. நாட்டில் நிலவுகின்ற பிரச்சினையை சமூக வலைத்தளங்களில் எடுத்துச் சொன்னால் அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் குறிப்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடுவது தான் இந்த அரசின் வாடிக்கையாக உள்ளது. இதற்கெல்லாம் ஒரு காலத்தில் பதில் சொல்லியாக வேண்டும்.
ஒட்டுமொத்தமாக அரசாங்கமே குளறுபடியாக தான் உள்ளது. அரசாங்கம் நன்றாக இருந்தால் தான் காவல்துறை சரியான முறையில் செயல்படும். தினம்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்றவை எல்லாம் தான் அன்றாட நிகழ்வாக இருக்கிறது. தொலைக்காட்சியிலும் பத்திரிகை செய்தியிலும் இதுபோன்ற செய்திகள் தான் இடம் பெறுகிறது. பொம்மை முதலமைச்சர் ஆளுகின்ற நாட்டில் இது போன்ற நிலைமை தான் நிலவும்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கும் பாஜகவிற்கும் தான் போட்டி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். மக்களிடத்தில் யார் யாருக்கு எதிரி என்று கேட்டால் மக்கள் தெளிவாக பதில் அளிப்பார்கள். அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி. நீண்ட காலம் தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சி. மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கக் கூடிய இந்த கட்சியை வேண்டும் என்றே திட்டமிட்டு சில பேர் கூறுவதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்.
உதயநிதி ஸ்டாலின் மாய உலகத்தில் மிதந்து இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் வரும் பொழுது அதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும். கூட்டணி குறித்து பாஜக மேலிடத்தில் ஒரு பொழுதும் பேச்சுவார்த்தை கிடையாது. அதிமுக ஏற்கனவே தெளிவான முடிவை எடுத்து அறிவிக்கப்பட்டு விட்டது. கூட்டணி குறித்து வி பி துரைசாமி கூறுகின்ற கருத்திற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. எங்களுடைய நிலைப்பாட்டையும் தீர்மானத்தையும் நாங்கள், தெளிவாக அறிவித்து விட்டோம்.
எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க வேண்டும், தமிழ்நாடு வளர்ச்சி பெற புதிய திட்டங்கள் வழங்கப்பட வேண்டும். அதிக நிதி ஒதுக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும். இதுதான் எங்களுடைய பிரதான கோரிக்கை. யார் ஆட்சிக்கு வந்தாலும் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறுகின்ற பொழுது இதனை முன் நிறுத்துவோம். தமிழ்நாடு மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.
கர்நாடக அரசு நமக்கு வழங்க வேண்டிய நீரை வழங்குகிறதா?, இங்க இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியினர் தண்ணீர் வேண்டும் என கேட்கிறார்கள், ஆனால் அங்கு இருக்கக்கூடிய காங்கிரஸ் அரசாங்கம் தண்ணீர் விடுவதில்லை இங்கு இருக்கக்கூடிய பாஜக தண்ணீர் வேண்டும் என்கிறது அங்கிருக்க கூடிய பாஜக தண்ணீர் திறந்து விடக்கூடாது என்கிறது. இதுதான் தேசிய அரசியல் அதற்காகத்தான் நாங்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றோம்.
தமிழ்நாட்டு மக்கள்தான் எங்களுடைய வேட்பாளர்களை வாக்களித்து வெற்றி பெற செய்கிறார்கள் எனவே அவர்களது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும். தமிழ்நாட்டு மக்கள் என் உரிமைகளை பாதுகாப்பதற்காக தான் நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம் என்பதை இந்நேரத்தில் உணர்த்துகிறேன். டிடிவி தினகரனை நாங்கள் பொருட்படுத்தவில்லை அவரது கட்சியை ஒரு கட்சியாக நாங்கள் பார்ப்பதில்லை. அவரது அட்ரஸ் காணாமல் போய்விடும். அவரது கட்சி விலாசம் இல்லாத கட்சியாக போய்விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.