/tamil-ie/media/media_files/uploads/2022/03/Sasikala.jpg)
OPS Brother Meet V K Sasikala IN Tiruchandur : நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து கட்சியில் சசிகலாவுக்கு உண்டான ஆதரவு பெருகி வரும் நிலையில், திருச்செந்தூரில் இன்று ஒபிஎஸ் தம்பி ஒ ராஜா சசிகலாவை நேரில் சந்தித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிலதா இறந்ததில் இருந்து அதிமுகவில், ஒபிஎஸ் இபிஎஸ் ஒரு அணியிலும் சசிகலா தனி அணியிலும், இருந்து வரும் நிலையில், இவர்களுக்குள் வெளிப்படையான மோதல் இருந்து வருகிறது. மேலும் அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்பதில் தொடங்கிய போட்டி தற்போதுவரை நீடித்து வருகிறது.
இதனிடையே சசிகலாவை சந்திக்கும் அதிமுக பிரமுகர்கள் பலரும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு வந்தாலும், அவரை சந்திக்கும் அதிமுக நிர்வாகிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வத்தின் தம்பி ஒ.ராஜா சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வயை சந்தித்த அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், ஆண்மீக பயணமாக திருச்செந்தூர் வந்த வி கே சசிகலாவை ஒ ராஜா சந்தித்துள்ளார் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்ய விடுதியில் தங்கியிருந்த சசிகலாவை 3 மணி நேர காத்திருப்புக்கு பின் ஒ.ராஜா சந்தித்து பேசியுள்ளார்.
கட்சியில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்று ஆதரவு பெருகி வருவது ஒபிஎஸ் இபிஎஸ் இடையே பதற்றத்தை அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஒபிஎஸ் தம்பியே சசிகலாவை சந்தித்திருப்பது அதிமுக வட்டராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.