தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்பாட்டம் : இ.பி.எஸ் – ஒ.பி.எஸ் பேசியது என்ன?

Tamilnadu News Update : திமுக ஆட்சி தேர்தல் நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கியது. அதில் ஒரு சில வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tamilnadu Aiadmk Protest Update : தமிழகத்தில் ஆளும் திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுகவின்ர் இன்று கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில்,  அதிமுக பிரமுகர்கள் அனைவரும் தங்களது சொந்த தொகுதியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

பெட்ரோல் டீசல விலையை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில், வாட் வரை குறைக்கப்பட்டு பெட்ரோல் டீசல் விலை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில். பெட்ரோல் டீசல் மீதான வரி குறைக்கப்படவில்லை மேலும் தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.  அத்தியாவசியாவசிய பொருட்களில் விலை ஏற்றம் கண்டுள்ளது.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த நீட் தேர்வு ரத்து, மற்றுமு் குடும்ப தலைவிகளுக்கு ரூ1000 ஊக்கத்தொகை திட்டம் இன்னும் நிறைவெறறப்படவில்லை. பொங்கல் பரிசாக மக்களுக்கு ரொக்கப்பணம் வழங்குவது குறித்து அறிவிக்கப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆளும் திமுக அரசை எதிர்த்து கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெற்றது. இதில் தேனியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தலைமை தாங்கிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் பேசுகையில், அதிமுக அரசு மட்டும் தான் கொரோனா நிவாண பணிகளை முழுவீச்சில் செய்தது. திமுக அரசு நிவாரண பணிகள் எதையும் மேற்கொள்ளவில்லை. அதிமுகவின் ஆர்பாட்டத்திற்கு பிறகே முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அதிமுக தான் உரிமைகளை போராடி மீட்கும் என்பது நிரூபணமாகியுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை மற்ற மாநிலங்களில் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் விடியாத ஸடாலின் அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. முதியோர் உதவித்தொகை ரூ 1500-ஆக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஏற்கனவே கொடுக்கப்பட்டு வந்த ரூ1000 நிறுத்தப்பட்டது. மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள் அதையும் செய்யவில்லை. குடும்ப தலைவிகளுக்கு மாதங்தோறும் ரூ 1000 வழங்கப்படும் என்று அது என்னவானது, போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் ரேஷன் கடைசியிலட தரமான அரிசி வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் ரெஷன் அரிசி மோசமாக உள்ளது அதனை கால்கநடைகளுக்கு கூட பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. காவல் தெய்வங்களாக உள்ள தூய்மை பணியாளர்களுக்கு ரூ 5000 ஊக்கதொகை வழங்கப்படும் என்று சொன்னார்கள் அதையும் நிறைவேற்றவில்லை. நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறி மாணவர்களை ஏமாற்றியுள்ளார்கள். அதிமுக ஆட்சியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதனால் 500-ககும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியாவில் ஒரே ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டுவந்தது அதிமுகவின் சாதனை. மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் இல்லையென்றால் ஆட்சி தானாகவே போய் சேர வேண்டிய இடத்திற்கு சென்றுவிடும் என்று கூறியுள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில்,

திமுக ஆட்சி தேர்தல் நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கியது. அதில் ஒரு சில வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. முக்கிய வாக்குறுதிகளாக அறிவிக்கப்ட கூட்டுறவு நகைககடன் தள்ளுபடி, பெண்களுக்கு உதவித்தொகை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை சுயஉதவி குழுக்களின் கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

பெட்ரோல டீசல் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்துவிட்டு விடியும் அரசு என்று கூறி தமிழக மக்களை வஞ்சித்துவிட்டு விடியா அரசாக செயல்பட்டு வருகிறது. கட்டுமான தொழிலில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுளளனர். சிமென்ட் விலை உயர்த்திய திமுக அரசு அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்காக தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தை மூடும் திமுக அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. ஊழியர்களுக்கு அகவிலைப்படி கொடுக்காமல் ஏமாற்றி வரும் அரசில் முதல்வர் பொம்மை முதல்வராக செயல்பட்டு வருகிறார்.

வேண்டுமென்றே முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவிவிட்டு பொய் வழக்கு போட்டு மக்களை திசை திருப்பும் நோக்கில் திமுக அரசு செய்ல்பட்டு வருகிறத. அவதுறு பரப்பினால் சட்டப்படி எதிர்கொள்வோம். ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால், திமுக அரசு வருகிற 2024-ம் ஆண்டு திமுக ஆட்சிமுடிவுக்கு வரும் என்று கூறயுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu aiadmk protest against dmk in all over tamilnadu eps ops speech

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com