முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட புதூர் கிராமத்தில் ரூ.17.95 லட்சம் மதிப்பீட்டில் கிராம சாவடி அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தி.மு.க. கூட்டணி கொள்கை கூட்டணி அல்ல, அது சூட்கேஸ் கூட்டணி" என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், தி.மு.க.வில் உள்ளோர் தவறாக பேசினால் உடனே சூட்கேஸ் எடுத்துச் செல்கின்றனர். விஜயின் அரசியல் விமர்சனங்கள் "நாங்கள் மக்களோடு இருக்கிறோம் என்பதைத்தான் விஜய் கூறியுள்ளார். தி.மு.க. வேஷம் போடுவதையே அவர் வெளிப்படுத்தியுள்ளார். நிர்மலா சீதாராமன் – செங்கோட்டையன் சந்திப்பு தமிழ்நாட்டின் கலாச்சாரம் என்னவென்றால், எதிரிகள் கூட பேசலாம். நிர்மலா சீதாராமன் தமிழர், மதுரையில் பிறந்தவர், அவரை சந்திப்பதில் தவறு இல்லை.
அ.தி.மு.க. தலைமையில்தான் 2026 தேர்தல் கூட்டணி அமையும்" என்று எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார் என்று செல்லூர் ராஜூ கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ். பாண்டியன், அண்ணாதுரை, பரவை ராஜா, திரவியம், மாவட்ட கவுன்சிலர் ஜெயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.