ஜல்லிக்கட்டுப்போட்டியில் எஜமானருக்கு சேவை செய்வதற்காகவா..? அமைச்சருக்கு உரிய மரபை காற்றிலே பறக்க விடுவது தவறான முன் உதாரணம் என்று ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திரு மங்கலம் தொகுதி டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், கட்சி மாணவரணி செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
முன்னதாக அம்மா கோவிலில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வெண்கல சிலைக்கு சட்டமன்ற எதிர்க் கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இக்கூட்டத்திற்கு டி.கல்லுப்பட்டி ஒன் றிய செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். பொருளாளர் வக்கீல் திருப்பதி, புளியங்குளம் ராமகிருஷ்ணன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனரணி செயலாளர் பேரையூர் ராம கிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், ராமையா, கண்ணன், பிரபு சங்கர் ஆகியோர் வரவேற்றனர்
விழாவில் பேசிய, ஆர்.பி.உதயகுமார், ஜல்லிக்கட்டு போட்டியை ஊர் கமிட்டி தான் நடத்துவார்கள். அதற்கு அரசு உறுதுணையாக இருக்கும். உள்ளூர் மக்கள் கௌரவிக்கப்பட வேண்டும் மண்ணின் மைந்தர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். அதுதான் மரபு. அப்படித் தான் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் இப்போது ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு வானத்திலிருந்து பொத்துக் கொண்டு பிறந்தவர்கள் போல அமைச்சர் மூர்த்தி நீங்களும் பத்து மாசம் தான் நாங்களும் பத்து மாசம் தான் எல்லோரும் தாய் வயிற்றில் பத்து மாசம் தான் நீங்கள் ஏன் ஜல்லிக்கட்டை மல்லுக்கட்டாக நடத்துகிறீர்கள்.
அமைச்சரின் மரபு கடைபிடிக்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என உறுதிமொழி ஏற்று உள்ளீர்கள். உறுதி மொழியை காற்றில் பறக்க விட்டு விட்டு நீங்கள் எஜமானருக்கு சேவை செய்வதற்காக அமைச்சருக்குரிய மரபை சுயநலத்திற்காக காற்றிலே பறக்க விடுவது தவறான முன் உதாரணம் நீங்கள் மக்களை ஏமாற்றுகிற நாடகம் காண்பதற்கு ஒரே தலைவர் புரட்சித்தமிழர் முதலமைச்சராக வேண்டும்.
அரசு விழாவாக மேடையில் அனைத்து அமைச்சர்களும் மாவட்ட ஆட்சியர் உதயநிதி ஸ்டாலின் எல்லோரும் நிற்கிறார்கள். ஆனால் தவ புதல்வன் உட்கார்ந்து உள்ளார். இதை எப்படி எடுத்துக் கொள்வது இவர்கள் நடத்துகிற கூத்து, கும்மாளத்திற்கு நிச்சயமாக தமிழ்நாட்டு மக் கள் தக்க பாடம் வருகிற சட்டமன்ற தேர்தலில் புகட்டுவார்கள் என பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“