பழனியப்பன் ஜம்ப்… எதிர்பார்த்தபடி அள்ளிச் சென்ற திமுக!

Ammk Executive Panaliappan : அமமுக முக்கிய நிர்வாகியான முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.

Ammk Executive Pananiappan Joined DMK Tamil Update : அமமுகவின் தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்ததில் இருந்து அதிமுக மற்றும் அமமுகவில் நாள்தோறும் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. அதிலும் முக்கியமாக அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பழனியப்பன் தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில், தேமுதிகவுடன் கூட்டணி அமைத்த அமமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. இதனால் கட்சியின் தலைமை மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியடைந்த நிர்வாகிக்கள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து வருகின்றனர். ஏற்கனவெ அதிமுகவில் இருந்து விலகி அமமுகவுக்கு சென்ற செந்தில் பாலாஜி அதனபிறகு திமுகவில் இணைந்தார். தொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அவர் தற்போது மின்சாரத்துறை அமைச்சராக உள்ளார்.,

மேலும் அதிமுவில் இருந்து திமுகவில் இணைந்த  தங்க தமிழ்ச்செல்வன், கடந்த தேர்தலில் ஒபிஎஸ்க்கு எதிராக போடி நாய்க்கனூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்விடைந்தார். ஆனாலும் கட்சியின் மக்கிய நிர்வாகியாக உள்ளார். அதேபோல் அதிமுகவில் இருந்து விலகிய ராஜகண்ணப்பன், திமுகவில் உயர்நிலையில் உள்ளார்.  இவர்களைப்போல் தற்போது பழனியப்பனும் அம்முகவில் இருந்து விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.

இதனால் அமமுக தொண்டர்கள்  அதிர்ச்சியில் உரைந்துள்ள நிலையில், இவரைத் தொடர்ந்து இன்னும் பலரும் அக்கட்சியிலிருந்து வெளியேறி திமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu ammk executive panaliappan joined in dmk

Next Story
நீலகிரிக்கு இது புதுசு… மக்களுக்கு உதவும் 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்கள்!Coonoor based cafe owner brings 6 auto ambulances to Nilgiris 319817
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com