பி.ரஹ்மான் கோவை
பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்து கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதனால் தமிழக அரசு மக்களை மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியில் தள்ளி வருகிறது எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் நீர் பாசன மேலாண்மைக்கு அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் இரு கட்சிகளும் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்..
கோவை கணபதி புதூர் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தை திறந்து வைத்த அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
பல்லடம் பகுதியில் விசைத்தறிகள் அதிகமாக இருக்கிறது. மின்கட்டணத்தை உயர்த்திய காரணத்தால் விசைத்தறி கூடங்களை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டள்ளது. இதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள விசைத்தறிகளுக்கு கூடுதலமாக இலவச மின்சாரத்தை வழங்க வேண்டும்.
கொரோனோவிற்கு பிறகு மேலும் மேலும் மக்களை மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியில் தமிழக அரசு தள்ளி வருகிறது. பண்டிகை காலமான இந்த நேரத்தில் ஆம்னி பேருந்து கட்டணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை உடனடியாக தமிழக அரசு குறைக்க வேண்டும். திமுக வாக்குறுதியில் மாதந்தோறும் மின்கட்டணம் எடுப்போம் என்றனர். அதை அமல்படுத்தவில்லை. அதை நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அத்திகடவு அவினாசி திட்டம் கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து 95 சதவீத பணிகள் முடிந்துள்ளது. கடந்த 4 மாதங்களாக எந்த வேலையும் நடக்கவில்லை. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். பாண்டியாறு புன்னம்புழா, ஆனைமலை நல்லாறு திட்டம் ஆகியவை இந்த மக்களின் நீண்ட கால கோரிக்கை. கேரள அரசிடம் பேசி இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நீர் பாசன திட்டங்களுக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
காவரியில் கடந்த 5 மாதத்தில் மட்டும் 530 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து கொண்டு இருக்கின்றது. இரு கட்சிகளும் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒருலட்சம் கோடி நீர் மேலாண்மைக்கு என தனியாக ஒதுக்கீடு செய்யவேண்டும் நிலுவையில் உள்ள திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும், காலநிலை மாற்றம் இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
பின்னலாடை தொழில் அதிகம் உள்ள கொங்கு பகுதியில் நூல்விலை உயர்வால் ஆயிரக்கணக்கான ஆலைகள் மூடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். இந்தியாவிற்கு அதிக அளவில் அந்நிய செலவானி கொங்கு மண்டலத்தில் இருந்து கிடைக்கின்றது. இந்த பகுதிக்கு மத்திய அரசுதனி கவனம் செலுத்த வேண்டும், மாநில அரசு கடிதம் எழுதுவதோடு இல்லாமல் அதை வலியுறுத்த வேண்டும்.
போதை பொருள் இளைய சமூகத்தை சீரழிக்கின்றது. பள்ளி கல்லூரி ஆசிரியர்களிடமிருந்து தான் தனக்கு அதிக வருகிறது எனவும் கஞ்சா எண்ணெய், கஞ்சா சாக்லேட், கஞ்சா ஸ்டாம்ப் என அதிகரித்து வருவதோடு போதைபொருட்கள் சுலபமாக கிடைக்கிறது. இதற்கு முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும் மேலும் போதை ஒழிப்புதுறைக்கு இருபதாயிரம் காவலர்கள் நியமிக்க வேண்டும். இதை முக்கிய பிரச்சினையாக முதல்வர் பார்க்க வேண்டும்.
நீலகிரி தேயிலைக்கு குறைந்த விலையே வழங்கப்படுகின்றது. பசுந்தேயிலைக்கு கூடுதல் கூலி பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தீபாவளிக்கு டாஸ்மாக்கிற்கு இலக்கை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது் இதை ஏற்க முடியாது. இலக்கு நிர்ணயம் செய்து இருப்பது வெட்க்கேடானது. தீபாவளிக்கு முந்தய நாள், அடுத்த நாள் கடையை மூட வேண்டும்
மன்னர்கள் உருவாக்கியது தான் ஏரிகளா? அதன் பிறகு ஏரிகளை உருவாக்க கூடாதா? விவசாயத்தில் லாபம் இல்லாததால் அதை மனைகளாக விற்கும் நிலை இருக்கிறது. கூடுதல் அணைகளை கட்டுவதுடன், பவானி அணையின் கொள்ளவை அதிகப்படுத்த வேண்டும். சென்னையில் புதிதாக 10 ஏரிகளை உருவாக்க வேண்டும். காவிரியில் வீணாகும் தண்ணீரை பம்ப் பண்ணி ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும். கோவை மண்டலம் மிகப்பெரிய சொத்து. இதை மத்திய,மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும்.
மேலும் பஞ்சுக்கும் ஜி.எஸ்.டி, நூலுக்கும் ஜி.எஸ்.டி, தயாரிக்கப்பட்ட துணிக்கும் ஜி.எஸ்.டி என விதிக்கப்படுவது பாதிப்பை ஏற்படுத்தும் நாடாளுமன்ற குழு குடியரசு தலைவரிடம் பரிந்துரை தொடர்பான கேள்விக்கு இந்தி மொழிக்கு ஒதுக்கீடு 15 சதவீதம் என்பது மாநில உரிமைக்கு எதிரானது. இன்றைய சூழலில் இது பொருந்தாது. இங்கிருக்கும் அரசு கல்லூரிகளில் நம் குழந்தைகள் படிக்க வேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் நமது மருத்துவமனைகளில் நமது மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள்.
மேலும் இந்தி பேசும் மாநிலங்களில் இணைப்பு மொழியாக இந்தி இருக்கும். இதனால் பாதிப்பு இருக்கது என பா.ஜ.க சொல்கிறது. 22 அலுவல் மொழிகளில் ஒன்று இந்தி. ஏன் இந்தியை திணிக்க வேண்டும். இந்தி அவசியம் என்றால் கற்றுகொள்வார்கள். திணிக்க கூடாது மத்திய அரசு பல வழிகளில் இந்தியை திணிப்பை செய்ய முயற்சி செய்கிறது. இந்தி திணிக்கும் முயற்சியை விட்டு விடுங்கள், இந்தி பேசும் மாநிலத்தில் மட்டும் இந்திமொழியில் பாடதிட்டங்களை கொண்டு வருகின்றோம் என்பது சரியானதல்ல.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை தொடர்பான கேள்விக்கு, தூத்துகுடி சம்பவத்தில் காவல்துறை இந்த அறிக்கையை தவறாக எடுத்துகொள்ள கூடாது. இந்த அறிக்கை காவல் துறைக்கு ஒரு படிப்பினை எனவும் யாருக்கும் யாரையும் சாகடிக்க உரிமை இல்லை. இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. சரியான அணுகுமுறையை காவல் துறை கடைபிடிக்கவில்லை எனவும் பதிலளித்தவர் 1987 ல் ஓரே நாளில் பா.ம.கவை சேர்ந்த 21 பேரை சுட்டு கொன்றார்கள். அன்று யாரும் கேட்கவில்லை. அன்று கேட்டு இருந்தால் தூத்துக்குடியில் இது போன்ற சம்பவம் இப்போது நடந்து இருக்காது என தெரிவித்தார் அன்புமணி ராமதாஸ்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.