முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக தமிழக மற்றும் கேரள உயர் அதிகாரிகளின் கூட்டம் நேற்று (அக்டோபர் 26) நடைபெற்றது.
கூட்டத்தில் கேரள தலைமைச் செயலாளர் டாக்டர் விபி.ராய், தமிழக கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா, மத்திய நீர் ஆணையத்தின் உறுப்பினரும் முல்லைப்பெரியாறு அணை குழுவின் தலைவருமான குல்ஷன் ராஜ் உள்ளிடோர் பங்கேற்றனர்.
பின்னர் பேசிய கேரள அமைச்சர் ரோஷி அகஸ்டின், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 137 கன அடியாக வைத்திருக்க வேண்டும் என தமிழகத்தை கேரளா அரசு வலியுறுத்தியுள்ளது.
அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழகம் வலியுறுத்தி வருவதை கருத்தில் கொண்டு கேரளா இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
அணையில் இருந்து சுரங்கப்பாதை வழியாக வைகை அணைக்கு அதிகபட்ச அளவு தண்ணீர் வருவதை உறுதி செய்து, படிப்படியாக நீரை கீழ்நிலைக்கு திறந்துவிட அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தை கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அணைக்கு ஏதேனும் ஆபத்து நேரிடும் என்ற அச்சத்தை ஒதுக்கி வைத்துள்ள அமைச்சர், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு சுரங்கப்பாதை வழியாக படிப்படியாக தண்ணீர் திறக்க வேண்டிய அவசர தேவை உள்ளது என்று கூறினார்.
முன்னதாக, அணையில் இருந்து சுரங்கப்பாதை வழியாக வைகை அணைக்கு அதிகபட்ச அளவு தண்ணீர் வருவதை உறுதி செய்து, படிப்படியாக நீரை கீழ்நிலைக்கு திறந்துவிட அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
பினராயி விஜயன், ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கேரளாவை 2021 அக்டோபர் 16 முதல் அழித்த சமீபத்திய வெள்ளம், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியதை சுட்டிக்காட்டியுள்ளார்
கேரளாவின் பல பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு மற்றும் கடும் வெள்ளம் காரணமாக கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் பலர் உயிரிழந்துள்ளனர் என்றார்.
அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க எங்களுக்கு உதவ, குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே ஷட்டர்களைத் திறப்பதற்கான ஏற்பாடுகளை கேரளாவிடம் செய்ய வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார்.
முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவது தொடர்பான விவகாரங்கள் குறித்து கேரளாவும், தமிழகமும் விவாதித்து, அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று அமைச்சர் ரோஷி அகஸ்டின் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil