காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் இருந்து கடலோர ஆந்திரா மற்றும் உள் தமிழகம் வழியாக காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வானிலை ஆய்வு மையம் தகவல் :
அதே போல் ஒர் இரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதகாக சென்னை மண்டல வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 10 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
அதேபோல் சேலம் ஏற்காடு, திருப்பூர் தாராபுரம், கோவை வால்பாறையில் தலா 4செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் தர்மபுரி, நீலகிரி மாவட்டம் குன்னூர், திருப்பூர் உடுமலைப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தலா 3 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சென்னையைப் பொருத்த வரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் இருக்கும். அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சமாக தலா 27டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.