தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் வரும் மார்ச் 28 ஆம் தேதி நடைபெறும் என இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் வரும் மார்ச் 28 ஆம் தேதி நடைபெறும் என இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பார் கவுன்சில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவி காலம் 2016 ஆம் ஆண்டு முடிவடைந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாமலேயே இருந்து வந்தது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலை நிர்வகிக்க தற்காலிக தலைவராக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் செயல்பட்டு வந்தார். மேலும், பார்கவுன்சில் பணிகளை மேற்கொள்ள சிறப்பு நிர்வாக குழு உறுப்பினர்களாக மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன் மற்றும் வழக்கறிஞர் சந்திரசேகர் ஆகியோரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.எம். அக்பர் அலி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தல் அதிகாரியாக நியமிப்பதகாவும். மார்ச் 28ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய பார் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ‌மொத்தமுள்ள 90 ஆயிரம் வழக்கறிஞர்களில் 53 ஆயிரத்து 620 வழக்கறிஞர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என கடந்த 17 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 169 வாக்குபதிவு மையங்கள் மூலமாக தேர்தல் வாக்குபதிவு நடைபெறும். தேர்தல் அறிவிப்பானை ஜனவரி 25 ஆம் தேதி வெளியிடப்படும்.

வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 01 ஆம் தேதி தொடங்கும்
பிப்ரவரி 15 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 22 ஆம் தேதி வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள் ஆகும். வேட்புமனுகள் பரிசீலனை முடிந்து
மார்ச் 01 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
மார்ச் 28 ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்.

தேர்தல் அறிவுப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு குழு உறுப்பினர்கள் மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன் மற்றும் சந்திரசேகர் பார்கவுன்சில் செயலாளர் சி.ராஜாகுமார் ஆகியோர் தேர்தல் நியாயமான முறையில் நடைபெற அனைத்து வழக்கறிஞர்களும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனவும். வாக்குக்கு பணம் அல்லது பரிசுப்பொருள்கள் அளக்கும் வேட்பாளர்கள் மீது தகுதி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அது போன்ற நபர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரை செய்யப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும் சிறந்த நிர்வாகிகளை தேர்வு வழக்கறிஞர்கள் தேர்வு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். தேர்தலில் போட்டியிட தகுதியுடையவர்கள் யார் என்ற விபரங்கள் வரும் 25 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close