வங்க கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் அறிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்றும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரித்துள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறுவுறுத்தப்பட்டுள்ளது.
November 2018
மேலும் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
November 2018
சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை மற்றும் மணிமுத்தாறு பகுதியில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பாம்பன், பாப்பனாசம், திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் தளா 5 செ.மீ மழை பதிவானது. அரந்தாங்கி, சிவகாசி மற்றும் காரைக்கால் பகுதியில் 4 செ.மீ பதிவாகியும், மற்றும் பிற மாவட்டங்களில் 2 முதல் 3 சென்டி மீட்டர் வரை பதிவானது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.